For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நல்லது செய்துள்ளோம்.. பாராட்டுங்கள்.. கணவரின் குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் அதிரடி பதில்!

பாஜக ஆட்சியில் நிறைய பொருளாதார சீர்திருத்தங்களை செய்துள்ளோம், எங்களை பாராட்டுங்கள் என்று தனது கணவரின் குற்றச்சாட்டிற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Nirmala Sitharaman’s husband slams bjp goverment economic policy

    டெல்லி: பாஜக ஆட்சியில் நிறைய பொருளாதார சீர்திருத்தங்களை செய்துள்ளோம், எங்களை பாராட்டுங்கள் என்று தனது கணவரின் குற்றச்சாட்டிற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.

    மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் மோசமாக இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பிரபாகர் பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளார். அவர் இது தொடர்பாக தி இந்து நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார்.

    பிரபாகர் தனது கட்டுரையில், பாஜக குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய பொருளாதாரம் மோசமடைவது குறித்த அச்சம் வெளிப்படையாக தெரிய தொடங்கி உள்ளது.

    பொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்பொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்

    மிக மோசம்

    மிக மோசம்

    தற்போதைய அரசு அதை தொடர்ந்து மறுத்து வந்தாலும், பல துறைகள் நாளுக்கு நாள் மோசமான நிலையை அடைந்து வருகிறது. அரசு இந்த சவால்களை எதிர்ப்பதற்கு, எதிர்கொள்வதற்கு போதிய திட்டங்களை வைத்திருப்பது போலவும் தெரியவில்லை. பாஜக, தனக்கு என்று ஒரு பொருளாதார கொள்கைகளை உருவாக்காமல் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது, என்றுள்ளார்.

    பாஜக எப்படி

    பாஜக எப்படி

    இந்நிலையில் தனது கணவரின் குற்றச்சாட்டிற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
    அதில், பாஜக ஆட்சியின் கீழ் பல பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஐந்து வருடத்தில் நல்ல பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. ஜிஎஸ்டி போன்ற மிக சிறப்பான பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    என்ன பதில்

    என்ன பதில்

    இதுபோன்ற சீர்திருத்தங்கள் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்படவில்லை. ஐபிசி, ஆதார் போன்ற திட்டங்கள், அதில் சீர்திருத்தங்களை நாங்கள்தான் கொண்டு வந்தோம். உஜ்வாலா திட்டம் மூலம் 8 லட்சம் பெண்கள் பலன் அடைந்துள்ளனர். வரி துறையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    பாராட்டு வேண்டும்

    பாராட்டு வேண்டும்

    கடந்த அக்டோபர் 1க்கு பிறகு தொழில்முனைவோர் நிறுவனங்களுக்கான வரிகள் மொத்தமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பலர் பயன் அடைவார்கள். இதை எல்லாம் பாராட்ட வேண்டும், என்று இவர் பதில் அளித்துள்ளார்.

    English summary
    Minister Nirmala Sitharaman replies to her Husband accusation on BJP's Economy policy .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X