For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராம்நகர் கோர்ட்டில் சாமியார் நித்தியானந்தா ஆஜர்: ஆண்மை சோதனை முடிவு இம்மாதம் 27ல் தாக்கல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: பலாத்கார புகார் தொடர்பாக ராம்நகர் நீதிமன்றத்தில்,சர்ச்சை சாமியார் நித்தியானந்தா இன்று ஆஜரானார்.

ஆரத்திராவ் என்ற முன்னாள் பெண் சிஷ்யை, நித்தியானந்தா சாமியாராகுக்கு எதிராக அளி்த்த பாலியல் புகாரின் பேரில் கர்நாடக சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nithyananda appeared before Ramanagaram court

இந்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் நித்தியானந்தா சாமியாருக்கு ஆண்மை பரிசோதனை, குரல் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதனிடையே வழக்கு இன்று ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி கோர்ட்டில் நித்தியானந்தா ஆஜராக வேண்டியது கட்டாயம். அதன்படி இன்று நித்தியானந்தா மற்றும் அவரது ஐந்து சிஷ்யர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதையொட்டி கோர்ட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால் விசாரணையை 27ம்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். இதையடுத்து சாமியார் தனது சிஷ்யர்களுடன் பிடதி ஆசிரமத்துக்கு திரும்பினார். 27ம்தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது, நித்தியானந்தாவிடம் நடத்தப்பட்ட ஆண்மை, குரல் பரிசோதனை முடிவுகள் கோர்ட்டில் சிஐடி போலீசாரால் தாக்கல் செய்யப்படும்.

English summary
Controversial godman Nithyananda was appeared before the Ramanagaram court on Wednesday in related to the case filed by one Arathi Rao who claimed that Nithyananda had sexually abused her. The Ramanagaram court adjourned its case to October 27.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X