For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நம்பிக்கையில்லா தீர்மானம்: அதிமுக சார்பாக பேச போகும் வேணுகோபால்.. முக்கிய விஷயங்களை பேச திட்டம்

இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன் பிரதமர் மோடி ஒருமணி நேரம் அவையில் பேச இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவுக்கு சாதகமாகும் அதிமுகவின் முடிவு- வீடியோ

    டெல்லி: லோக் சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன் அதிமுக சார்பாக எம்.பி வேணுகோபால் பேச இருக்கிறார். இதில் பல முக்கியமான விஷயங்கள் குறித்து பேச உள்ளார்.

    இந்திய அரசியல் வரலாற்றில் இன்று மேலும் ஒரு முக்கியமான நாள். தெலுங்கு தேசம் கட்சி சார்பாக பாஜகவிற்கு எதிராக லோக் சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    No-confidence motion: MP Venugopal will give speak for AIADMK in the bench

    பரபரப்பாக இன்று கூட இருக்கும் இன்றைய லோக் சபா கூட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

    இந்த நிலையில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன் நடக்கும் விவாதத்தில் யார் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்று நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது . அதிமுகவுக்கு 29 நிமிடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அவையில் மூன்றாவது தனிப்பெரும் கட்சி என்பதால் இவ்வளவு நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

    இதில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அதிமுக சார்பில் வேணுகோபால் பேசுகிறார். அவருக்கு பின்பாக தம்பிதுரை பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில் பல முக்கியமான விஷயங்கள் குறித்து அவர் பேசுவார்.

    அதேபோல் தமிழக பிரச்சினைகள் குறித்து வேணுகோபால் பேச வாய்ப்பு உள்ளது. இந்த தீர்மானம் பற்றியும் , நீட் காவிரி குறித்தும் அவர் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே பேச உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால் ராகுல்காந்திதான் 11.30 மணிக்கு, காங்கிரஸ் சார்பாக உரையை தொடங்க உள்ளார். நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசுவார்.

    English summary
    No-confidence motion: MP Venugopal will give speak for AIADMK in the bench amidst the Modi and Rahul speech.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X