For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குட்டையான உருவம்! வலுவான தாடை.. கொழுக் மொழுக் தசைகள்! ஆபத்தான பிட்புல் நாய்களுக்கு கான்பூரில் தடை!

Google Oneindia Tamil News

கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பிட்புல் மற்றும் ரூட்வீலர் நாய் இனங்களை வளர்ப்பதற்கு அந்த மாநகர மேயர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிட்புல் நாய் இனங்கள் அமெரிக்கா நாட்டை சேர்ந்தவை. இவை அண்மைக்காலமாக விலங்குகள் மற்றும் மனிதர்களை தாக்குலம் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் உள்ள சர்சயா காட் பகுதியில் பிட்புல் நாய் ஒன்று பசுவை தாக்கும் வீடியோ அண்மையில் சமூகவலைதளங்களில் வைரலானது. பசுவை கடுமையாக தாக்கிய அந்த பிட்புல் நாயை கான்பூர் மாநகராட்சி ஊழியர்கள் கைப்பற்றினர்.

ஓபிஎஸ் கையில் 3+1 ஆப்ஷன்கள்.. டெல்லி கைவிட்டாலும்.. இருக்கு மெகா அஸ்திரம்.. ரிப்போர்ட் லீக் ஆகுமாம்! ஓபிஎஸ் கையில் 3+1 ஆப்ஷன்கள்.. டெல்லி கைவிட்டாலும்.. இருக்கு மெகா அஸ்திரம்.. ரிப்போர்ட் லீக் ஆகுமாம்!

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம்

அது போல் கடந்த ஜூலை மாதம் உத்தரப்பிரதேசத்தில் 82 வயது மூதாட்டியை பிட்புல் வகை நாய் கடித்ததால் அவர் உயிரிழந்தார். இந்த நிலையில்தான் கான்பூர் நகர எல்லைக்குள்பட்ட பிட்புல் மற்றும் ரூட்வீலர் இன நாய்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கான்பூர் மேயர் பிரமீளா பாண்டே கூறுகையில் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் இந்த நாய்களை நகர எல்லைக்குள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 சர்சயா

சர்சயா

சர்சயா காட் பகுதியில் பசு மாட்டை பிட்புல் இன நாய் ஒன்று தாக்கிய வீடியோ வைரலான நிலையில் அந்த வகை நாய்களின் தாக்குதல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது என பிரமீளா தெரிவித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு பிட்புல் ரக நாய் கடித்து 48 பேர் மரணமடைந்ததாக ஒரு சர்வே கூறுகிறது. அது போல் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் 11 வயது சிறுவனை பிட்புல் நாய் கடித்து அவனுக்கு முகத்தில் மட்டும் 150 தையல்கள் போடப்பட்டன.

பிட்புல் நாய்கள்

பிட்புல் நாய்கள்

பிட்புல் நாய்கள் புல்டாக் மற்றும் டெர்ரியர் வகையை சார்ந்தது. இவை அமெரிக்காவில் 1927 ஆம் ஆண்டு முதல் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நாய்கள் மூர்க்கக் குணம் கொண்டவை. இவை குட்டையான உருவம், பெரிய வலிமையான உடல் தடைகள் கொண்டவை. சிறிய கண்களையுடையது. இந்த நாய்கள் தோற்றத்திலேயே ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தும்.

தாடை வலிமை

தாடை வலிமை

இந்த நாய்களின் தாடை வலிமையானது. இது ஒருவரை கடித்தால் அதை விடுவிப்பது மிகவும் கடினம். ஒருவரை கடித்துவிட்டாலே இந்த பிட்புல்கள் ஆக்ரோஷமாக மாறிவிடும். இவை எஜமானர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டவை. எனினும் சில நேரங்களில் எஜமானர்களை கடித்து அவர்கள் காயமடைந்தும் உயிரிழந்தும் இருக்கிறார்கள். இவை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சீதோஷ்ண நிலைக்கே பொருந்தக் கூடியவையாகவும் கூறப்படுகிறது.

English summary
No Pitbulls allowed in Kanpur City, says Mayor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X