நுபுர் ஷர்மா சர்ச்சை.. ராஞ்சியில் பரபரப்பு.. வான் நோக்கி சுட்ட போலீஸார்.. கட்டுக்குள் வந்த போராட்டம்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில ராஞ்சியில் நுபுர் ஷர்மாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை கட்டுப்படுத்த போலீசார் வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து பேசிய கருத்துகள் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு 15க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகள் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து பாஜகவில் இருந்து நுபுர் ஷர்மா இடைநீக்கம் செய்யப்பட்டார். இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும், அரசு தாமதமான நடவடிக்கை எடுத்ததாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் தொடங்கிய போராட்டம்
இந்தநிலையில் டெல்லி ஜும்மா மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுமையை முடித்து வெளிவந்த இஸ்லாமியர்கள், திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை கண்டித்து முழக்கங்கள் எடுக்கப்பட்டது. அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தது போதாது என்றும், கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கங்கள் எடுக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரம் நீடித்த போராட்டம், அடுத்த சில மணி நேரங்களில் கைவிடப்பட்டது.

அடுத்தடுத்து பரவிய போராட்டத் தீ
டெல்லியைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் லக்னோ, பிரயக்ராஜ் உள்ளிட்ட நகரங்களிலும், கொல்கத்தா, மேற்கு வங்கம், ஹைதராபாத் என பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகா மாநிலத்தில் பெலகாவி பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் நுபுர் ஷர்மாவின் உருவ பொம்மை தூக்கிலிடப்பட்டு எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதேபோல் பல்வேறு பகுதிகளில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

போலீஸ் அனுமதிக்கவில்லை
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அமைதிப் போராட்டத்திற்கு வர்த்தகர்கள் சங்கம் தரப்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதனால் காலை முதலே ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து இஸ்லாமியர்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இதையடுத்து வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை முடிவடைந்தவுடன் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் போராட்டத்தை கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.

போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு
இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் போலீசார் ஏராளமானோர் காயமடைந்தனர். போராட்டம் கலவரமாக மாறியதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டதோடு, போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அனைவரும் கலைந்து சென்றனர்.

உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
இதனிடையே மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களையும் அலர்ட்டாக இருக்க எச்சரிக்கை விடுத்துள்ளது. நுபுர் ஷர்மா சர்ச்சையால் இஸ்லாமியர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாநிலங்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications