For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐ.நா.வில், இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக அமெரிக்கா ஆதரவு: ஒபாமா உறுதி

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகள் அந்தஸ்து இந்தியாவுக்கு கிடைக்க அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று ஒபாமா தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று ஒபாமா கூறியதாவது: இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்தியாவின் வரவேற்பு விருந்தோம்பல் இருந்தது. சிக்கலான பன்னாட்டு சூழலிலும் இந்திய அமெரிக்க உறவு நீடிக்கிறது.

Obama says progress made on nuclear sticking point

இந்தியாவும், அமெரிக்காவும் இருபெரும் ஜனநாயக நாடுகள். இந்தியாவுடனான வர்த்தகத்தை அதிகரிக்க அமெரிக்கா விரும்புகிறது. இரு நாடுகளுக்கிடையே 100 மில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற வேண்டும். இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எட்டப்பட்டுள்ளது. ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் தொடரும்.

இந்தியாவுடனான உறவு அமெரிக்காவின் வளர்ச்சிக்கு அவசியமானது. இந்தியாவும் அமெரிக்காவும் நீண்ட காலமாக உறுதியான உறவைப் கொண்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு அளிக்கப்படும்.

ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக நாங்கள் ஆதரவளிப்போம். சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதியில் இந்தியா முக்கியப் பங்காற்றி வருகிறது. ஐ.நா.வின் அமைதித் திட்டத்தில் இந்தியா பல ஆண்டுகளாக முக்கியப்பங்கு வகிக்கிறது. மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது என்றார்.

English summary
The leaders of India and the United States, testing the diplomatic extent of their personal friendship, said on Sunday they'd made progress on a deal allowing U.S. firms to cooperate on civilian nuclear power plants in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X