For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கீதாவின் ஆசைப்படி சைகை மொழியில் டப் செய்யப்படும் சல்மானின் பஜ்ரங்கி பாய்ஜான்

By Siva
Google Oneindia Tamil News

இந்தூர்: பஜ்ரங்கி பாய்ஜான் படத்தை சைகை மொழியில் டப் செய்கிறார்கள். பாகிஸ்தானில் இருக்கும் இந்திய பெண் கீதாவின் விருப்பப்படி டப் செய்யப்படுகிறது.

இந்தியாவில் இருந்து வழி தவறிச் சென்று பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக வசித்து வரும் இளம்பெண் கீதா. காது கேளாத, வாய் பேச முடியாத அவரின் பெற்றோர் பீகாரில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் விரைவில் இந்தியா திரும்ப உள்ளார்.

On Geeta's Wish, 'Bajrangi Bhaijaan' to be Dubbed in Sign Language

இந்நிலையில் கீதா சல்மான் கான் நடித்த பஜ்ரங்கி பாய்ஜான் படத்தை பார்த்துள்ளார். பாகிஸ்தானில் இருந்து வழி தவறி இந்தியாவுக்கு வரும் சிறுமியை சல்மான் அவரின் குடும்பத்தாருடன் சேர்ப்பது தான் படத்தின் கதை.

தன் கதை போன்று இருக்கும் இந்த படத்தை பார்த்த கீதா இதை சைகை மொழியில் டப் செய்தால் தன்னைப் போன்று இருப்பவர்கள் பார்த்து ரசிக்கலாமே என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சைகை மொழி நிபுணர் ஞானேந்திர புரோகித் கூறுகையில்,

நான் கராச்சியில் இருக்கும் கீதாவுடன் வீடியோ கால் மூலம் பேசினேன். சல்மான் கானின் பஜ்ரங்கி பாய்ஜானை சைகை மொழியில் டப் செய்தால் தன்னைப் போன்றோர் பார்த்து ரசிக்க வசதியாக இருக்கும் என்றார். கீதாவை இந்தியாவுக்கு அழைத்து வருவது குறித்து நான் வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் கடந்த மூன்று மாதங்களாக தொடர்பில் உள்ளேன்.

நாங்கள் பஜ்ரங்கி பாய்ஜான் படத்தை சைகை மொழியில் டப் செய்ய உள்ளோம். அந்த டப்பிங் வேலை முடிந்து படம் வெளியாகும் வேளையில் சல்மான் மற்றும் கீதா அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி பார்த்துக் கொள்வோம். கீதா சல்மான் கானின் தீவிர ரசிகை என்றார்.

English summary
Based on a request made by Geeta, the deaf-mute Indian girl stranded in Pakistan and set to return to India, Salman Khan-starrer "Bajrangi Bhaijaan" will be dubbed into a sign language so that special people like her could watch and appreciate the movie.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X