For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ஒன்இந்தியா'வின் வங்க மொழி இணையதளம்

By Siva
Google Oneindia Tamil News

http://bengali.oneindia.com/
பெங்களூர்: ஒன்இந்தியா நிறுவனம் புதிதாக வங்க மொழி செய்தி இணையதளத்தைத் துவங்கியுள்ளது.

ஒன்இந்தியா நிறுவனம் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் குஜராத்தி ஆகிய மொழிகளில் ஆன்லைன் செய்தி இணையதளங்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஒன்றான வங்க மொழியிலும் ஒன்இந்தியா செய்தி இணையதளத்தை துவங்கியுள்ளது http://bengali.oneindia.com. இதன் மூலம் ஒன்இந்தியா கிழக்கு இந்தியாவிலும் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

வங்க மொழி இணையதளத்தில் 24 மணிநேரமும் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தேசிய, சர்வதேச செய்திகள் ஆகியவை வெளியிடப்படும். இது தவிர சினிமா குறித்த செய்திகள், ஜோக்குகள், கேலரிகள் மற்றும் வீடியோக்களையும் இணையதளத்தில் பார்க்கலாம்.

இது குறித்து ஒன்இந்தியாவை நடத்தும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட்டின் சிஇஓ ஸ்ரீராம் ஹெப்பார் கூறுகையில்,

ஒன்இந்தியா குஜராத்தி இணையதளத்தை துவங்குகையிலேயே புதிய மொழிகளில் இணையதளங்கள் துவங்கப்படும் என்று நான் உறுதி அளித்தேன். இது வங்க மொழி வாசகர்களுக்கு எங்களின் விருந்து ஆகும். வங்க மொழி ஒன்இந்தியா வாசகர்கள் நியூஸ்லெட்டரை பெற தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம். உங்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரிலும் ஒன்இந்தியா வங்க மொழி இணையதளத்தை அந்த மொழியிலேயே படிக்கலாம் என்றார்.

English summary
India's leading online language portal Oneindia added a fresh feather to its crown with the launching of the Bengali portal http://bengali.oneindia.com. Starting a portal in one of India's
 most-spoken language is a major step that the Oneindia family has taken towards reaching out to a bigger audience.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X