For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமர் ஜவான் ஜோதியை அணைக்க கடும் எதிர்ப்பு: சமூக ஊடகத்தில் விவாதம்

By BBC News தமிழ்
|
அமர் ஜவான் ஜோதி
Getty Images
அமர் ஜவான் ஜோதி

இந்தியத் தலைநகர் டெல்லியில், இந்தியா கேட்டில், இந்தியா சார்பாக ராணுவ பணியில் உயிரிழந்த முப்படையினர் நினைவாக எழுப்பப்பட்ட அமர்ஜவான் ஜோதி வெள்ளிக்கிழமை (ஜனவரி 21) அணைக்கப்பட்டு, தேசிய போர் நினைவகத்தில் ஒன்றாக இணைக்கப்படுமென நேற்று வியாழக்கிழமை செய்தி வெளியானது.

ஜோதியை அணைக்கும் நிகழ்வு இன்று நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் படையினரின் கூட்டுத் தலைவராக இருக்கும் ஏர் சீப் மார்ஷல் பாலபத்ரா ராதா கிருஷ்ணா, நெருப்பை இணைக்க உள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாகவும் செய்தி வெளியானது.

அமர் ஜவான் ஜோதியை அணைப்பது தொடர்பான செய்திக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிப்புகளும், விமர்சனங்களும் எழுந்தன.

அதைத் தெளிவுபடுத்தும் விதத்தில், அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படவில்லை, அது தேசிய போர் நினைவகத்தில் எரியும் ஜோதியோடு இணைக்கப்படுகிறது என மீண்டும் அரசு தரப்பிலிருந்து விளக்கப்பட்டது.

https://twitter.com/ani_digital/status/1484386825037053954

1914 - 21 வரையான காலகட்டத்தில் போரில் உயிரிழந்த பிரிட்டிஷ் இந்திய வீரர்களின் நினைவாக, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இந்தியா கேட் கட்டப்பட்டது.

1971ஆம் ஆண்டு போரில், எதிரி நாட்டுப் படையைச் சேர்ந்த 93,000 துருப்புகள் இந்தியாவிடம் சரணடைந்தன. போரில் இந்தியா மகத்தான வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதத்தில், 1970களில் இந்தியா கேட்டில் அமர் ஜவான் ஜோதி நிறுவப்பட்டது.

அமர் ஜவான் ஜோதி ஏற்றப்பட்டது முதல், தொடர்ந்து சுமார் 50 ஆண்டுகளாக அணையாமல் எரிந்து வருகிறது.

அமர் ஜவான் ஜோதி
Getty Images
அமர் ஜவான் ஜோதி

இந்திய அரசின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளான சுதந்திர தினம், குடியரசு தினம், முப்படைகளின் தினம், வெளிநாட்டுத் தலைவர்களின் வருகை போன்றவற்றின்போது இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர்ஜவான் ஜோதிக்கு தலைவர்களும் அதிகாரிகளும் மரியாதை செலுத்துவது வழக்கம்.

அமர் ஜவான் ஜோதி நிறுவப்பட்ட இடத்துக்கு அருகில் தான், நரேந்திர மோதி அரசால் 2019ஆம் ஆண்டு திறக்கப்பட்ட தேசிய போர் நினைவகம் இருக்கிறது. அதுநாள்வரை அமர்ஜவான் ஜோதி பகுதியில் நடத்தப்பட்டு வந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் புதிய போர் நினைவகத்துக்கு மாற்றப்பட்டன.

இந்த புதிய நினைவகத்தில் 1947 - 48 பாகிஸ்தானுடனான போர் தொடங்கி கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தோர் வரை, அனைத்து வீரர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொண்டு உயிர்தியாகம் செய்த இந்திய வீரர்களின் பெயர்களும் இங்கு பொரிக்கப்பட்டுள்ளன.

கடும் எதிர்ப்பு:

தேசிய போர் நினைவகம்
Getty Images
தேசிய போர் நினைவகம்

"அமர் ஜவான் ஜோதியில் நம் ராணுவ வீரர்களுக்காக எரியூட்டப்பட்டு வந்த நெருப்பு இன்று அணைக்கப்படுவது பெரும் வருத்தமளிக்கிறது. சிலரால் தேச பக்தியையும், தியாகத்தையும் புரிந்து கொள்ள முடியாது. நாங்கள் மீண்டும் நம் ராணுவ வீரர்களுக்காக அமர் ஜவான் ஜோதியை ஏற்றுவோம்" என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

அமர் ஜவான் ஜோதி, தேசிய போர் நினைவக ஜோதியோடு இணைக்கப்படுவது என்பது வரலாற்றை அழிப்பதற்குச் சமம். பாஜக தேசிய போர் நினைவகத்தைக் கட்டியதற்காக, அமர் ஜவான் ஜோதியை அவர்கள் அணைக்கலாம் என்று பொருளல்ல என காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் மணீஷ் திவாரி தன் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

https://twitter.com/maya206/status/1484200050238660612

நீங்கள் எப்படி நினைவஞ்சலிக்காக எரியூட்டப்பட்டு வரும் நெருப்பை அணைப்பீர்கள்? அது வருத்தமளிக்கிறது மற்றும் இச்செயல் தவறாகப்படுகிறது. இரண்டு நினைவஞ்சலி நெருப்புகள் தொடர்ந்து எரியூட்டப்பட முடியாதா? என ஒரு டுவிட்டர் பயனர் கேள்வி எழுப்பியுள்ளார்.

https://twitter.com/realkaypius/status/1484371092391477250

130 கோடி பேர் கொண்ட, ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட கனவு காணும் ஒரு நாட்டில் இரு நினைவஞ்சலி சுடரைக்கூட தொடர்ந்து எரியூட்ட முடியவில்லை என்பதை வரலாறு பதிவு செய்து கொள்ள வேண்டும் என மற்றொரு பயனர் தன் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Opposition slams Centre over decision to extinguish flame of Amar Jawan Jyoti
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X