For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டபத்துக்குள் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளம்: பீதியை கிளப்பும் வீடியோ

சபரி மலை அய்யப்பன் கோவிலுக்குள் பம்பை ஆற்று வெள்ள நீர் புகுந்ததால் நடை சாத்தப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டபத்துக்குள் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளம்

    திருவனந்தபுரம்: சபரி மலை அய்யப்பன் கோவில் மண்டபத்துக்குள் பம்பை ஆற்று வெள்ள நீர் புகுந்ததால் கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது.

    தென் மேற்கு பருவமழையின் தீவிரத்தால் கேரள மாநிலம் சின்னாபின்னமாகியுள்ளது. மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

    ஆயிரக்கணக்கான வீடுகள் மண்சரிவில் சிக்கி புதைந்துள்ளன. 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

    மாயம்

    லட்சக்கணக்கான வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்டோர் வெள்ளம் மற்றும் மண்சரிவில் மாயமாகியுள்ளனர்.

    ஆக்கிரமித்த வெள்ளம்

    ஆக்கிரமித்த வெள்ளம்

    தொடர் கனமழையால் நிரம்பிய அணைகள் பாதுகாப்பு கருதி திறக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 33 அணைகள் திறக்கப்பட்டதால் ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது.

    பம்பை ஆற்றில் வெள்ளம்

    பம்பை ஆற்றில் வெள்ளம்

    மருத்துவமனை, விமான நிலையம், ரயில் நிலையம், பள்ளிகள் கோவில்கள் என எதையும் விட்டுவைக்கவில்லை வெள்ளம். இந்நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலை ஒட்டிய பம்பை ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    அய்யப்பன் கோவிலில் வெள்ளம்

    அய்யப்பன் கோவிலில் வெள்ளம்

    பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டபத்திற்குள் வெள்ள நீர் சூழ்ந்து ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது.

    வைரலாகும் வீடியோ

    வைரலாகும் வீடியோ

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் வழியில் வெள்ளம் சூழ்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ஏராளமானோர் ஷேர் செய்து வருகின்றனர்.

    English summary
    Pamba river flood enters in Sabarimala Ayyappa Temple. Ayyappa temple has been closed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X