For Daily Alerts
ரயில்வே பார்க்கிங்- பிளாட்பாரம் டிக்கெட்டுகள் இனி ஒரே இடத்தில் கிடைக்கும்

இன்று தனது முதல் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த கெளடா இதைத் தெரிவித்தார்.
ரயில் நிலையங்களில் வாகனங்களை பார்க் செய்துவிட்டு அதற்கு ஒரு டிக்கெட் எடுப்பதும், பிறகு பயணிகளை வழியனுப்ப செல்லும்போது பிளாட்பாரம் டிக்கெட் எடுப்பதும் நடைமுறையில் உள்ளது. இவ்விரண்டக்குமே கியூவில் நிற்க வேண்டியிருப்பதால், கால நேரம் விரையமாகிறது. சிலர், பிளாட்பாரம் டிக்கெட் எடுக்க மறந்து சென்று தர்ம சங்கடத்தில் சிக்கி கொள்வதும் உண்டு.
இதற்காகவே, இந்த பட்ஜெட்டில், பார்க்கிங் டிக்கெட் வாங்கும் இடத்திலேயே, பிளாட்பாரம் டிக்கெட்டையும் பெற வசதி செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கால நேரம் விரையமாவது தவிர்க்கப்படும். இதுபோல, பிளாட்பாரம் டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.