For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பதன்கோட் தாக்குதல் எதிரொலி: பாக். முன்னாள் தூதர்களுடன் சுஷ்மா அவசர ஆலோசனை

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பதன்கோட் தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானில் பணியாற்றிய இந்திய தூதரக அதிகாரிகளுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அவசர ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து சுஷ்மா அப்போது கருத்து கேட்டார்.

பதன்கோட் விமானப்படை தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், பாகிஸ்தான் மீது இந்திய மக்கள் கோபமாக இருப்பதால், பேச்சுவார்த்தை நடத்துவது சரியாக இருக்காது என்று அதிகாரிகள் பலரும் கருத்து கூறியுள்ளனர். சிலர், பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம் என்று அதற்கான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

Pathankot attack: Sushma Swaraj meets former diplomats

பாகிஸ்தானுக்கான முன்னாள் தூதர்கள் சத்யப்ரதா பால், சரத் சபர்வால், ராகவன் உள்ளிட்டோர் மட்டுமின்றி, முன்னாள் தேசிய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஷியாம் சரண் ஆகியோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

English summary
External affairs minister Sushma Swaraj went into a huddle with former senior diplomats who had extensive experience in Pakistan on Sunday as terrorists allegedly from across the border continued to fire at security forces inside the Pathankot air base.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X