Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பிறர் மகிழ்ச்சியில் இன்பம் காணக்கூடியவர் எனது தாய்.." அம்மா மீது அளப்பரிய அன்பு வைத்திருந்த மோடி!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: அகமதாபாத்: பிறரது மகிழ்ச்சியில் இன்பம் காணக்கூடியவர் எனது தாயார். பரந்தமனப்பான்மை கொண்டவர். முன்பு எப்படியோ தற்போதும் அதேபோல ஒரு எளிமையான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வந்தார். எப்போதும் பிறரது விருப்பங்களுக்கு மரியாதை கொடுத்தார். என்று பிரதமர் மோடி தனது தாயின் 100-வது பிறந்த நாளின் போது உணர்ர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டு இருந்தார். கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி வெளியிட்ட அந்த பதிவை மீண்டும் தற்போது காணலாம்.

பிரதமர் மோடியின் தயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை காலமானார். தாயார் மீது மிகுந்த அன்பு வைத்திருந்த பிரதமர் மோடி, குஜராத் மாநிலம் வரும் போதெல்லாம் தனது தாயாரை மறக்காமல் வந்து சந்தித்து விட்டு ஆசி பெற்று செல்வது வழக்கம்.

குஜராத் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த போது கூட தாயாரை சந்தித்து விட்டு நலம் விசாரித்துவிட்டுதான் பிரதமர் மோடி சென்று இருந்தார்.

பாதபூஜை செய்து ஆசிர்வாதம்

பாதபூஜை செய்து ஆசிர்வாதம்

தனது தாயார் மீது அலாதி அன்பும் பிரியமும் வைத்திருந்த பிரதமர் மோடி, தாயரின் 100-வது பிறந்த நாளின் போது அவருக்கு பாதபூஜை செய்து ஆசிர்வாதம் செய்தார். பின்னர் தனது தாயார் குறித்து மிகவும் உணர்ச்சிகரமாக பதிவிட்டு இருந்தார். தனது சிறுவயது முதல் தாயார் காட்டிய அன்பு, கருணை என அனைத்தையும் குறிப்பிட்டு பிரதமர் மோடி அந்த பதிவில் எழுதியிருந்தார். கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருந்தாவது:-

 ஜன்னல் கூட இல்லாத வீட்டில் தான்..

ஜன்னல் கூட இல்லாத வீட்டில் தான்..

எனது தாயார் ஹீராபென் மோடி 100-வது வயதில் அடி எடுத்து வைத்துள்ளார். எனது தயார் எவ்வளவு எளிமையானவர். சிறு வயதிலேயே அவரது தாயை பறிகொடுத்து இருந்தார். தாய் இல்லாமல் ஒட்டு மொத்த சிறு வயதையும் கழித்தார். வத் நகரில் எங்கள் குடும்பம் ஒரு ஜன்னல் கூட இல்லாத சிறிய வீட்டில் தான் வசித்தது. கழிவறை, குளியல் அறை என்பது கூட ஆடம்பர ஒன்றாக பார்க்கும் குடும்ப சூழலில் தான் நாங்கள் இருந்தோம். சிறிய அறை கொண்ட அந்த வீட்டில்தான் நான் எனது சகோதரர் உள்பட அனைவரும் வசித்தோம்.

 சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு தேநீர்

சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு தேநீர்

தூய்மை பழக்கங்களுக்கு எனது தாய் எப்போதும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார். சுகாதார பணியில் ஈடுபடுவோர் மீது எனது தாய் மிகுந்த மரியாதையும் முக்கியத்துவத்தையும் கொடுப்பார். வத் நகரில் எனது வீட்டின் அருகே இருக்கும் பகுதிக்கு கழிவு நீரை சுத்தம் செய்ய வரும் பணியாளர்களுக்கு தவறாமல் தேநீர் கொடுப்பார். பிறரது மகிழ்ச்சியில் இன்பம் காணக்கூடியவர் எனது தாயார். பரந்தமனப்பான்மை கொண்டவர்.

வாக்களிக்க தவறியது இல்லை

வாக்களிக்க தவறியது இல்லை

சுமார் 20 நிமிடங்களுக்கு முன்பு நான் குஜராத் முதல்வராக பதவியேற்ற விழாவில் எனது தாயார் என்னுடன் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பிறகு எந்த பொது நிகழ்ச்சியிலும் என்னுடன் எனது தாயார் பங்கேற்றது இல்லை. நான் ஒரு நல்ல குடிமகனாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து எனது அம்மா எப்போதும் என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். ஒருமுறை கூட எனது அம்மா வாக்களிக்க தவறியது இல்லை.

எளிமையான வாழ்க்கையைத்தான்..

எளிமையான வாழ்க்கையைத்தான்..

பஞ்சாயத்து தேர்தல் முதல் நாடாளுமன்ற தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்து இருக்கிறார். மிகவும் எளிய வாழ்க்கையை எனது தாயார் வாழ்ந்தார். எந்த தங்க ஆபரணங்களை அணிந்தும் நான் பார்த்தது இல்லை. முன்பு எப்படியோ தற்போதும் அதேபோல ஒரு எளிமையான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வந்தார். எப்போதும் பிறரது விருப்பங்களுக்கு மரியாதை கொடுத்தார். எனது விஷயத்தில் கூட எந்த தடங்கலும் எனக்கு விதிக்காமல் என்னை ஊக்கப்படுத்தினார்.

உன் மனம் சொல்வது போல செய்

உன் மனம் சொல்வது போல செய்

நான் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்த போது எனக்கு முழு ஆதரவு அளித்தார். எனது மன நிலையை புரிந்து கொண்டு உன் மனம் சொல்வது போல செய் என்று கூறி எனக்கு ஆசிதான் வழங்கினார். குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நான் முதன் முதலாக எனது தாயாரை சந்தித்த போது, எந்த காரணத்தை கொண்டும் லஞ்சம் மட்டும் வாங்காதே என்று அறிவுரை கூறினார். போனில் பேசும் போதெல்லாம், "எந்த தவறான காரியத்தையும் செய்யாமல் ஏழைகளுக்காக தொடர்ந்து பணியாற்றிக் கொண்டே இரு" என்று அறிவுரை கூறுவார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+