பெற்ற பிள்ளைகளை நடு ரோட்டில் விட்டுவிட்டு ஓடிய கள்ளக்காதல் ஜோடிகள்.. கேரளாவில் பரபரப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் அருகே குழந்தைகளை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் தப்பி ஓடிய 2 ஜோடிகளை போலீஸார் பிடித்து சிறையில் அடைத்தனர்.

திருவனந்தபுரத்தில் நெய்யாற்றின்கரை அருகே காஞ்சிரங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட். இவரது மனைவி ரோஸ்மேரி (23). இருவரும் காதலித்து கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டனர்.

இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. ராபர்ட் சவுதியில் பணியாற்றி வருகிறார். விடுமுறை காலங்களில் ஊருக்கு வந்து மனைவி, குழந்தையை பார்த்து விட்டு செல்வார்.

ரோஸ்மேரிக்கு கள்ளக்காதல்

ரோஸ்மேரிக்கு கள்ளக்காதல்

இந்நிலையில் கணவர் வெளிநாட்டில் உள்ளதால் ரோஸ்மேரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சாஜன் (27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. ரோஸ்மேரி தனது தாய், தந்தைக்கு நேற்று அதிகாலை போன் செய்துள்ளார். அப்போது தான் சாஜன் என்பவருடன் செல்வதால் குழந்தையை நெய்யாற்றின்கரையில் உள்ள கட்டடத்தில் விட்டு செல்வதாகவும் அதை கொண்டு செல்லுமாறும் கூறியுள்ளார்.

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

இதை கேட்டதும் ரோஸ்மேரியின் தாய், தந்தை ஆகிய இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். பதற்றத்துடன் ஓடி சென்று குழந்தையை மீட்டனர். இதையடுத்து இருவரும் சென்று காஞஅசிரங்குளம் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் தனது தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது விழிஞசம் அழிமலைபகுதியில் இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சாஜன் கஞ்சா விற்பனை, திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் ரோஸ்மேரி மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்ய்

கள்ளக்காதல் ஜோடி

கள்ளக்காதல் ஜோடி

திருவனந்தபுரம் அருகே பாலராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சஜி. இவரது மனைவி லட்சுமி (22). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே பள்ளிச்சல் பகுதியை சேர்ந்த ராஜ் என்பவருடன் லட்சுமிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 குழந்தையையும் அம்போவென விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டார். இதையடுத்து சஜி போலீஸில் புகார் கொடுத்தார்.

சிறையிலடைப்பு

சிறையிலடைப்பு

இந்த நிலையில் இருவரும் அஞ்சுதெங்கு கடற்கரை பகுதியில் ஒரு வீட்டில் இருந்தது தெரியவந்தது. போலீஸார் அங்கு சென்று இருவரையும் மீட்டனர். பின்னர் அவர்களை நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Police arrest 2 women who have gone with their paramours by leaving their children near Tiruvananthapuram.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற