மகளை கொன்ற தந்தை.. இறந்த உடலுடன் செய்த “ச்சீ ச்சீ” காரியம்.. கொடூரனை கொத்தாக தூக்கிய போலீசார்..!

Subscribe to Oneindia Tamil

போபால் : மத்திய பிரதேச மாநிலத்தில் 14 வயது மகளை அடித்துக் கொன்று, மகளின் இறந்த உடலுடன் உடலுறவு வைத்துக் கொண்ட கொடூர தந்தையை கைது செய்துள்ள காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தின் அருகே உள்ள ஜைடா டோங்கா என்ற கிராமத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளியான திலீப் சிங் பிஹால் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் 14 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில் நேற்றிரவு தனது மகளை காணவில்லை என அப்பகுதியில் உள்ள பஜ்ரங்கர் காவல் நிலைய போலீசாரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தார். இதையடுத்து ஆள் மாயம் என வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சிறுமி மாயம்

சிறுமி மாயம்

காதல் விவகாரத்தில் சிறுமி மாயமானாரா அல்லது அவரை யாரும் கடத்தி சென்றார்களா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இரவு முழுவதும் விசாரணை நடத்தியும் எந்த தகவலும் கிடைக்காத நிலையில் சிறுமியின் கிராமத்தில் போலீசார் கிராம மக்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாயமான சிறுமி அவரது தந்தையுடன் தான் சென்றார் என கிராம மக்கள் பலரும் போலீசாரிடம் கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் திலீப் சிங்கை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதிர்ச்சி தகவல்

அதிர்ச்சி தகவல்

விசாரணையில் போலீசாரை மட்டுமல்ல இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது. சம்பவம் நடைபெற்ற நேற்று இரவு திலீப் சிங் தனது 14 வயது மகளை கிராமத்தின் அருகில் உள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். தனது பேச்சை கேட்கவில்லை என கூறி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று மிரட்டியதோடு தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார்.

சடலத்துடன் உடலுறவு

சடலத்துடன் உடலுறவு

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி கிராமத்திற்குச் சென்று நடந்ததை கூறப் போவதாக கூறியதால் அச்சமயத்தில் சிறுமியை கட்டையால் அடித்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். மேலும் உயிரிழந்த சடலத்துடன் கொடூர குணம் கொண்ட திலிப் சிங் உடலுறவு கொண்டுள்ள அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறியுள்ளது. திலிப் சிங் கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அப்பகுதிக்கு சென்று அங்கு கிடந்த 14 வயது சிறுமியின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

மேலும் கொடூரமாக கொலை பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகளைக் கொன்று அந்த உடன் தந்தை உடலுறவு வைத்துக் கொண்ட சம்பவம் மத்திய பிரதேசம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+