ஊர் ஓர பண்ணை வீடு! இருட்டறையில் 2 நாளாக 5 பேர்! நம்பிவந்த காதலியை மிருகங்களுக்கு இரையாக்கிய கொடூரன்
அமராவதி : ஆந்திர மாநிலம் சத்யசாயி அருகே 22 வயது மாணவியை காதலிப்பதாக கூறி பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சத்தியசாயி மாவட்டம், நல்ல பள்ளியை சேர்ந்த 22 வயது மாணவி. இவர் திருப்பதியில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி 3ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சாதிக் என்பவரும் மாணவியும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது,
இந்த நிலையில் நேற்று முன்தினம் திருப்பதிக்கு வந்த சாதிக் கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி காரில் மல்லபள்ளியில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆந்திராவில் அதிர்ச்சி
அங்குள்ள தனி அறைக்கு கல்லூரி மாணவியை அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே திட்டமிட்ட படி தனது நண்பர்களை அந்த அறையில் தங்க வைத்திருந்தார். மதுபோதையில் இருந்த நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவியை அறையில் அடைத்து வைத்து 2 நாட்களாக பலாத்காரம் செய்தனர். இதனால் மாணவி சோர்வடைந்து மயக்கமடைந்தார். இதையடுத்து மாணவியை மின்விசிறியில் தூக்கிலிட்டு கொலை செய்தனர்.

பலாத்காரம் செய்து கொலை
பின்னர் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக அங்குள்ள போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது மாணவியின் கால்கள் கட்டில் மீது படர்ந்தபடி இருந்தது. இதனால் சாதிக் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரித்தனர். மேலும் மாணவியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பெற்றோர் போராட்டம்
இதில் மாணவியை பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது. இதற்கிடையே மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி பலாத்காரத்தில் ஈடுபட்ட சாதிக் மற்றும் அவரது நண்பர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், அதுவரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

இளைஞர் கைது
மாணவியின் மரணம் குறித்து காவல்துறை சந்தேக மரணம் என்று எஃப்ஐஆர்-ல் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் மாணவியின் உடலை மருத்துவமனையில் இருந்து பெற்றுக்கொண்ட பெற்றோர், உறவினர்கள் மற்றும் மகளிர் சங்கத்தினர் ஆகியோர் அவரது உடலுடன் கோரண்ட்லா காவல் நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், உடற்கூறு ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனிடையே புகாருக்குள்ளான சாதிக்கை போலீசார் கைது செய்ததோடு, தலைமறைவாக உள்ள அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications