For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திரும்பி வந்துட்டார்னு சொல்லு.."இந்திரா காந்தி திரும்பி வந்துட்டார்"னு சொல்லு.. கொண்டாடும் காங்கிரஸ்

பிரியங்கா காந்தி வருகையால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    முழு நேர அரசியலில் பிரியங்கா காந்தி... காங்கிரஸ் அதிரடி- வீடியோ

    சென்னை: "இந்திரா காந்தி திரும்பி வந்துவிட்டார்" என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பிரியங்கா வருகையை காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்று வருகின்றனர். நாட்டின் தலைவர்கள் முதல் எல்லா டிவிக்கள் வரை உன்னிப்பாக பார்ப்பது பிரியங்காவின் பேட்டி, பேச்சுக்களைத்தான்!

    உத்திரபிரதேசம் காங்கிரசிடம் அதல பாதாளத்தில் தொங்கி கொண்டிருக்கிறது. ரேபரேலி, அமேதி இந்த இரு தொகுதிகள் மட்டும்தான் இப்போதைக்கு கைவசம் உள்ளது. அதுகூட சோனியாவும், ராகுலும் போட்டியிட்டதால்தான். இல்லையென்றால், இவையும் பாஜகவிடம் போய் சேர்ந்திருக்கும்.

    இப்படி நெருக்கடியான நேரத்தில்தான் பிரியங்கா கட்சிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட கடைசி நம்பிக்கை என்று கூட சொல்லலாம். ஆரம்பத்தில் ஒட்டுமொத்த மாநிலத்துக்கும்தான் பிரியங்காவை பொறுப்பாளராக நியமிக்க கட்சிக்குள் பேசப்பட்டது.

    தெளிவான முடிவு

    தெளிவான முடிவு

    ஆனால் கிழக்கு மண்டலத்தை மட்டும் முதலில் கவனம் செலுத்தி, அதனை கையாள்வதுதான் சிறப்பாக இருக்கும் என்று பிரியங்காதான் யோசித்திருக்கிறார். இவரது இந்த தெளிவில்தான் காங்கிரசின் நம்பிக்கை அதிகமாகவே கூடிவிட்டது.

    அமேதி, ரேபரேலி

    அமேதி, ரேபரேலி

    கட்சியை தாண்டி உ.பி. காங்கிரசாருக்கும் பிரியங்கா நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டார். பதவி தந்த முதல்நாளே, "இந்திரா காந்தி திரும்பி வந்துவிட்டார்" என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டு மாநிலத்தையே கலக்கியது. அதிலும் அமேதி, ரேபரேலியில் வருங்கால பிரதமர் ராகுல்காந்தி என்ற வாசகத்துடன், திரும்பி வந்த இந்திரா காந்தி பேனர்களை ஏந்தி தொண்டர்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர்.

    அரசியல் ஆட்டம்

    அரசியல் ஆட்டம்

    "சிறுபான்மையினர், தலித் அல்லாதவர்கள், ஜாதவ், யாதவ் அல்லாத ஓ.பி.சி.,க்கள்" இவர்கள்தான் பிரியங்காவின் முக்கிய குறி. இவர்களை மையப்படுத்திதான், இவர்களை பிரதானப்படுத்திதான் தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்க போகிறாராம். இதைதவிர, உபி மாநிலத்தில் பலமுள்ள மற்றும் பலவீமான பாஜக முக்கிய புள்ளிகள் யார் என்ற ஒரு லிஸ்ட்டும் தயாராகி பிரியங்காவிடம் தரப்பட்டுள்ளதாம்.

    புளியை கரைக்கிறது

    புளியை கரைக்கிறது

    அதனால் மாநிலத்தின் சூழல், எதிர்தரப்பினரின் நடவடிக்கைகள், சிறுபான்மை, மற்றும் தலித் மக்களின் முக்கிய பிரச்சனைகள், இவைகளையெல்லாம் முன்னெடுத்துதான் பிரியங்காவின் அரசியல் ஆரம்பமாக போகிறது. பிரியங்கா வருகையால் காங்கிரஸ் தொண்டர்கள் கிட்டத்தட்ட உபியே தங்கள் கட்சிக்கு கிடைத்துவிட்டதாக ஒரு நினைப்புக்கு வந்துவிட்டாலும், பாஜக தலைவர்களின் வயிற்றில் லைட்டாக புளியை கரைக்க ஆரம்பித்துள்ளது.

    English summary
    Priyanka Gandhi's visit is encouraged by congressional volunteers in Uttar Pradesh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X