குஜராத் சட்டசபை தேர்தல்.. பிரதமர் மோடி, ராகுல்காந்தி டிவிட்டரில் வேண்டுகோள்
அகமதாபாத் குஜராத் சட்டசபை தேர்தலின் இறுதி கட்டமாக பிரதமர் மோடி, ராகுல்காந்தி ஆகியோர் டிவிட்டரில் அம்மாநில மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குஜராத் சட்டசபைக்காக 2ம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி, பாஜ மூத்த தலைவர் அத்வானி, அமித்ஷா, அருண் ஜெட்லி உள்ளிட்டோர் வாக்களிக்க உள்ளனர்.
குஜராத் மாநில சட்டசபைக்கான மொத்தமுள்ள 182 தொகுதிகளில், 89 இடங்களுக்கான முதல்கட்ட தேர்தல் கடந்த 9ம் தேதி நடைபெற்றது.
இத்தேர்தலில் 66.75 சதவீத வாக்குகள் பதிவாகின.
|
குஜராத் 2ஆம் கட்ட தேர்தல்
மீதமுள்ள 93 தொகுதிகளுக்கான 2ம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. அகமதாபாத், பதான் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் தேர்தல் நடக்கிறது.வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 2.2 கோடி. வாக்குப் பதிவுக்காக 28,114 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
|
851 வேட்பாளர்கள்
வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 25,558. மொத்தம் 851 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில், குஜராத் துணை முதல்வர் நிதின்பாய் படேல், அமைச்சர்கள் பூபேந்திரா, சங்கர் சவுத்ரி ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
|
மோடி வேண்டுகோள்
இந்நிலையில் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் குஜராத் தேர்தல் குறித்து பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது குஜராத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்கு பதிவு செய்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாநிலத்தின் எதிர்காலம்
இதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் டிவிட்டர் வாயிலாக குஜராத் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது
மாநிலத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். இதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் டிவிட்டர் வாயிலாக குஜராத் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது
மாநிலத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.