For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'கொற்கை' நாவலுக்காக ஜோ.டி. குரூஸுக்கு சாகித்ய அகாடமி விருது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

R N Joe D Cruz gets Sahitya Akademi award for his Tamil novel
டெல்லி: 2013 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் 'கொற்கை' நாவலை எழுதிய ஜோ.டி. குரூஸுக்கு இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், இந்தி, உருது, தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட 21 மொழிகளில் வெளியாகும் சிறந்த கவிதை, சிறுகதை, நாவல் மற்றும் சுயசரிதைகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி தமிழில் இந்தாண்டு 'கொற்கை' என்ற நாவலை எழுதிய ஜோ.டி. குரூஸ் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆழிசூழ் உலகு' என்னும் தன் முதல் நாவலின்மூலம் சூழலில் கவனம் பெற்ற ஆர்.என். ஜோ டி குரூஸின் இரண்டாம் நாவல் கொற்கை. காலம்'. இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். நூறாண்டுக்கும் மேற்பட்ட காலவெளியில் பயணம் செய்யும் இந்த நாவல், கடல்சார் பரதவர் சமூகத்தின் மாற்றத்தைச் சித்தரிக்கிறது.

ஆங்கிலேய இந்திய ஆட்சி, கிறித்தவ சமயத்தின் பிரவேசம், சுதந்திரப் போராட்டம், சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், நவீனத்துவத்தின் வருகை ஆகியவை பரதவர் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைத் துல்லியமாகவும் கலை அமைதியுடனும் கூறியுள்ளார் ஜோ டி குரூஸ்.

பல விதமான நிகழ்வுகளையும்மனிதர்களின் வெவ்வேறு முகங்களையும் மாற்றத்தின் வியக்கவைக்கும் கோலங்களையும் நுட்பமான சித்தரிப்பில் வெளிப்படுத்துவதன்மூலம் கலைபூர்வமான வரலாற்று ஆவணமாகவும் திகழ்கிறது இந்த நாவல். இதனாலேயே புவியில் எல்லைகளையும் காலப் பரப்பையும் மூகவரையறைகளையும் தாண்டி விரிவுகொண்டு நிற்கிறது இந்த நாவல்.

English summary
Eminent Tamil novelist R N Joe D Cruz, has won the Sahitya Akademi Award for Tamil Literature for his novel Korkai the year 2013.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X