For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில் டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33%; லோயர் பெர்த்தில் மூத்த குடிமக்களுக்கு 50% இடஒதுக்கீடு

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ரயில் டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த்தில் 50% ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பெண்கள், மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பு, சலுகைகள் இடம்பெற்றுள்ளன.

Railway budget: 33% seats reserved for women in all categories

அதில், ரயில் டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும். அதேபோல் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த்தில் 50% ஒதுக்கீடு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதாவது ஒவ்வொரு ரயிலிலும் 120 லோயர் பெர்த்துகள் மூத்த குடிமக்களுக்கு ஒதுக்கப்படும்.

மேலும் இ கேட்டரிங் சேவை 408 ரயில் நிலையங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும். டெல்லி- சென்னை இடையேயான சரக்கு பாதை திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Union Railway Minister Suresh Prabhu announced that will be increase in seat quota this year for both women and senior citizens. While the seat quota is up 50% for senior citizens, 33% seats will be reserved for women in all categories.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X