நடுரோட்டில் நின்று உச்சா போன ராஜஸ்தான் பாஜக சுகாதார அமைச்சர்- வைரலாக பரவும் போட்டோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சாலையில் உச்ச போய் சிக்கிக்கொண்ட அமைச்சர் | Oneindia Tamil

  ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் பாஜகவை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் கலிசரண் சரஃப் நடு சாலையில் நின்று சுவரில் சிறுநீர் கழிக்கும் படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  மத்தியில் ஆளும் பாஜக அரசு ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மாநிலங்கள்தோறும் ஆளுநர்கள் துடைப்பத்தை எடுத்து தூய்மை செய்வது போல் போஸ் கொடுத்து வருகின்றனர்.

  நடு சாலையில் சிறுநீர் கழித்த அமைச்சர்

  நடு சாலையில் சிறுநீர் கழித்த அமைச்சர்

  இந்நிலையில் ராஜஸ்தான் மாநில ஆளும் பாஜகவைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் கலிசரண் சரஃப் ஜெய்ப்பூர் சாலையில் சிறுநீர் கழிக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக வலம் வருகிறது. சாலைகளில் சிறுநீர் கழித்தால் ரூ200 அபராதம் விதிக்கப்படும் என்பது விதி.

  நோ கமெண்ட்ஸ் என்கிறார் அமைச்சர்

  நோ கமெண்ட்ஸ் என்கிறார் அமைச்சர்

  ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் சுகாதாரத்துறை அமைச்சரே இப்படி நடுரோட்டில் சிறுநீர் கழித்திருப்பதுதான் சர்ச்சையாகி உள்ளது. இந்த விவகாரம் ஒன்றும் மிகப் பெரியது அல்ல.. கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் கலிசரண் சரஃப் தெரிவித்துள்ளார்.

  அமைச்சரின் செயல் அவமானம்

  அமைச்சரின் செயல் அவமானம்

  இப்போது இந்த விவகாரத்தை காங்கிரஸ் கையிலெடுத்துள்ளது. ஒரு அமைச்சர் தமது சொந்த தொகுதியில் இப்படி செய்திருப்பது அவமானகரமானது என ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் அர்ச்சனா சர்மா சாடியுள்ளார்.

  மத்திய அமைச்சரும் சர்ச்சையில்

  மத்திய அமைச்சரும் சர்ச்சையில்

  ஏற்கனவே மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன்சிங் பீகாரில் இதேபோல் நெடுஞ்சாலையில் சிறுநீர் கழித்து சர்ச்சையில் சிக்கினார். அதுவும் பாதுகாவலர்கள் புடை சூழ ராதாமோகன் சிங் சிறுநீர் கழிக்கும் படம் வெளியாகி பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A picture of Rajasthan Health Minister Kalicharan Saraf urinating on the walls of the City has gone viral in social medias.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற