For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குட்டீஸ்களுக்கு பணம் கொடுத்து காந்திய கொள்கைகளை போதிக்கும் டாக்டர்

By Siva
Google Oneindia Tamil News

ஜெய்பூர்: ராஜஸ்தானில் டாக்டர் ஒருவர் குழந்தைகளுக்கு காந்தியவாத கொள்கைகளை கற்றுக் கொடுக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் டாக்டராக உள்ளவர் விரேந்திர சிங். அவர் சிறுவர், சிறுமியர் இடையே காந்தியக் கொள்கைகளை பிரபலமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் கடந்த 2007ம் ஆண்டு முதல் சிறுவர், சிறுமியருக்கான சிறப்பு முகாமை நடத்தி வருகிறார்.

இந்த முகாமுக்கு வரும் குழந்தைகளுக்கு அவர் தலா ரூ.100 ரொக்கமும், ஒரு தபாலும் அளிக்கிறார். அந்த ரூ.100ல் 50 ரூபாயை இல்லாதவர்களுக்கு அளிக்குமாறும், மீதமுள்ள தொகையை குழந்தைகளை செலவு செய்துகொள்ளுமாறும் கூறுகிறார் விரேந்திரா.

குழந்தைகள் அந்த பணத்தை எப்படி செலவு செய்தார்கள் என்பதை விரேந்திராவுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கின்றனர். முகாமில் கலந்து கொள்ளும் குழந்தைகளிடம் காந்தி சிறு வயதில் சில சமயம் பொய் கூறியது மற்றும் பணத்தை தவறாக பயன்படுத்தியது குறித்தும் பின்னர் அவர் உலகம் கொண்டாடும் தலைவராக உருவெடுத்தது குறித்தும் விரேந்திரா தெரிவித்து வருகிறார்.

அவரது முகாமில் கலந்து கொண்ட ரோஹித் என்ற சிறுவன் தான் தெருவில் திரியும் மாடு ஒன்றுக்கு அடிபட்டபோது உதவியது பற்றி டாக்டருக்கு கடிதம் எழுதியுள்ளான்.

English summary
A doctor in Rajasthan is spreading the teachings of Mahatma Gandhi among small children in a unique way. Dr Virendra Singh, superintendent of Sawai Man Singh (SMS) Hospital, regularly organises workshops in Jaipur to spread the message of honesty and compassion among kids.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X