பிரதமர் தொகுதியில் பெண்களுக்கு பாதுக்காப்பில்லையா? பொங்கி எழுந்த பாஜக..கடும் அமளி..பரபரத்த ராஜஸ்தான்
ஜெய்ப்பூர் : பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது என ராஜஸ்தான் மாநில அமைச்சர் கூறியதாக கடும் அமளியில் ஈடுபட்ட பாஜக உறுப்பினர்களால் சட்டப்பேரவையில் பரபரப்பு நிலவியது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.
இன்று காவல் மற்றும் சிறை துறைக்கான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அமைச்சர் சாந்தி குமார் தரிவால் பாஜகவை மிக கடுமையாக விமர்சித்தார்.

பாஜக குறித்து விமர்சனம்
தனது பேச்சின் இடையே உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து மக்களின் கவனத்தை திசை திருப்ப எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால் கூறினார். மூன்று மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக தெரிவித்தார்.

வாரணாசி தொகுதி
மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த நாடாளு மன்ற தொகுதியான உத்தரப் பிரதேசம் வாரநாசி நாடாளுமன்றத் தொகுதியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது எனவும் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்தாலும் முதல் தகவல் அறிக்கை கூட செய்யமாட்டார்கள் காவல்துறையினர் என குற்றம்சாட்டினார்.

கடும் அமளி
அமைச்சர் சாந்தி குமார் தாரிவாலின் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் உருவான நிலையில் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினர். இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்கும் ராஜேந்திரா கூறும்போது, அமைச்சர்கள் இதுபோன்ற பொருத்தமில்லாத எதிர்வினையாற்றும் கருத்துக்களை கேட்பதற்காக பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வரவில்லை என்றார்.

சகிப்புதன்மை இல்லை
அதே நேரத்தில் சகிப்புத்தன்மை இல்லாதவர்களாக பாஜக உறுப்பினர்கள் உள்ளனர் எனவும் அவர்களால் விமர்சனங்களை எப்போதும் பொறுத்துக் கொள்ள முடியாது என அமைச்சர் தாரிவால் கூறியுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப்பிரதேச மாநிலம் தான் முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் 2020ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
-
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications