பழைய பால் கவர் கொடுத்தால்.. பெட்ரோல், டீசல் விலையில் தள்ளுபடி.. ராஜஸ்தானில் சூப்பர் ஆஃபர்!
பழைய காலி பால் பாக்கெட்டுகளுக்கு பெட்ரோல் விலையில் தள்ளுபடி தருவதாக அறிவித்துள்ளது ராஜஸ்தானில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்று.
ஜெய்ப்பூர்: காலி பால் பாக்கெட்டுகள் அல்லது பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொடுத்தால், பெட்ரோல் விலையில் தள்ளுபடி வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ராஜஸ்தானில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம்.
பெண்கள் தினமும் தங்கம் விலை நிலவரத்தை ஆர்வமாகப் பார்ப்பது போல, ஆண்கள் பெட்ரோல், டீசல் விலையைப் பார்த்து வருகின்றனர். வண்டியை விற்றுத்தான் பெட்ரோல் போட வேண்டும் போல என வாகன ஓட்டிகளே நொந்து கொள்ளும் அளவிற்கு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனாலேயே ஆடி மாதம் துணிக்கடைகளில் தள்ளுபடி போடுவது போல, பெட்ரோல் நிலையத்தில் யாராவது தள்ளுபடி தர மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இந்நிலையில், வாகன ஓட்டிகளின் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல், ராஜஸ்தானில் இயங்கி வரும் பெட்ரோல் நிலையம் ஒன்று அதிரடியாக தள்ளுபடி ஒன்றை அறிவித்துள்ளது.

பெட்ரோல் விலை தள்ளுபடி
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் இயங்கி வருகிறது இந்த பெட்ரோல் நிலையம். அசோக் குமார் முந்த்ரா என்பவர் நடத்தி வரும் இந்த பெட்ரோல் நிலையத்தில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு முகாம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் விலையில் தள்ளுபடியை அறிவித்துள்ளார் அசோக்குமார்.

பால் பாக்கெட்
அதாவது, காலி பால் பாக்கெட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைக் கொடுத்தால் பெட்ரோல், டீசல் விலையில் தள்ளுபடி வழங்கப்படும் என அசோக்குமார் தெரிவித்துள்ளார். ஒரு காலி பால் பாக்கெட் அல்லது பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கொடுத்தால் பெட்ரோல் விலையில் 1 ரூபாயும், டீசல் விலையில் 50 பைசாவும் தள்ளுபடி வழங்கப்படும். சராஸ் டய்ரி நிறுவனம், பில்வாரா மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உதவியுடன் அசோக்குமார் இந்த தள்ளுபடியை அறிவித்துள்ளார்.

700 காலி பாக்கெட்டுகள்
காலி பால் பாக்கெட்டுகள் அரை லிட்டர் என்றால் இரண்டும், ஒரு லிட்டர் என்றால் ஒன்றும், காலி தண்ணீர் பாட்டில் ஒரு லிட்டர் அளவுள்ளதிற்கும் இந்தத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சேகரிக்கப்படும், காலி பால் பாக்கெட்டுகளை சராஸ் டய்ரி நிறுவனம் பெற்றுக்கொள்கிறது. இதுவரை சுமார் 700 காலி பால் பாக்கெட்டுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

கால்நடைகளுக்கும் பாதிப்பு
"பிளாஸ்டிக் மற்றும் பாலீதீன் பைகளால் ஏற்படும் தீமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த முகாமை அமைத்துள்ளோம். இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தள்ளுபடியை மூன்று மாத காலத்திற்கு அளிக்க இருக்கிறோம். பில்வாராவை பாலீதீன் மற்றும் பிளாஸ்டிக் இல்லாத நகரமாக்குவதே எனது கனவு. ஏனென்றால் பிளாஸ்டிக் மற்றும் பாலீதீன் பைகளால் சுற்றுப்புறச்சூழலுக்கு கேடு ஏற்படுவதோடு, நாய், பசு போன்ற கால்நடைகளின் உடல்நலமும் பாதிக்கப்படுகிறது" என்கிறார் அசோக்குமார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications