For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து விவாதிக்கத் தயார்: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்

By Mathi
Google Oneindia Tamil News

Ready to Discuss Leader of Parliament Issue: Speaker Sumitra Mahajan
டெல்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து எந்த ஒரு கட்சியுடனும் விவாதிக்க தயார் என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார்.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு காங்கிரஸ் பகீரத பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது. லோக்சபா எதிர்க்கட்சியாக 54 எம்.பி.க்கள் தேவை.

ஆனால் பாரதிய ஜனதாவுக்கு அடுத்தபடியாக, அதிக இடங்களைப் பிடித்த தனிப் பெருங்கட்சியாக இருப்பதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தங்களுக்கே வழங்க வேண்டும் என்பது காங்கிரஸ் கோரிக்கை.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக காங்கிரஸ் உட்பட எந்தக் கட்சி தம்மிடம் பேசினாலும், அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கட்சியுடன் விவாதிக்கத் தயாராக இருப்பதாக கூறினார்.

லோக்சபா கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதே தனது பிரதான குறிக்கோள் என்றும் பொருளாதாரம் மற்றும் இதர விவகாரங்களில் நாடு சந்திக்கும் பிரச்னைகளுக்கு அர்த்தமுள்ள விவாதம் மூலம் தீர்வு காணப்படும் என்றும் சுமித்ரா மகாஜன் கூறினார்.

English summary
With the Congress raising the pitch on the issue of Leader of the Opposition or LoP in the Lok Sabha, Speaker Sumitra Mahajan today said she was ready to discuss the issue with the party if approached by Congress leaders. "If somebody comes to me and talks to me, be it Congress or any other party, I will definitely talk to them," Ms Mahajan told reporters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X