ஹிஜாப் தடை.. மதம் - கல்வியில் ஒன்றை மட்டுமே எப்படி தேர்வு செய்ய முடியும்? இஸ்லாமிய மாணவிகள் குமுறல்
சிவமொக்கா: ‛‛ மதம், கல்வி இரண்டுமே நமக்கு முக்கியம். இவற்றில் ஒன்றை மட்டும் தேர்வு செய்யுங்கள் என அவர்களால் எப்படி கூற முடியும்?. இது உணவு, தண்ணீர் ஆகியவற்றில் ஒன்றை மட்டும் தேர்வு செய்ய கூறுவது போன்றது. இதில் ஒன்றை வைத்து மட்டும் வாழ முடியுமா?'' என ஹிஜாப் தடை குறித்து சிவமொக்காவில் மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.
Recommended Video
ஹிஜாப் தொடர்பான வழக்கில் நேற்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனக்கூறிய உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனக்கூறி கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.
இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும், இன்னொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து உள்ளனர். மேலும் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு ேஹாலி விடுமுறைக்கு பிறகு விசாரணைக்கு வர உள்ளது.

மகிழ்ச்சி தரவில்லை
இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து சிவமொக்காவில் மாணவிகள் பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை. எங்களது உரிமைகளை பெற பல நாட்கள் போராடினோம். ஆனால் எங்களுக்கான உரிமை கிடைக்கவில்லை. எங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இடையூறு இல்லை
இந்த பிரச்சனைக்கு முன்பு நாங்கள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதினோம். கடைசி ஒன்றரை மாதத்தில் தான் ஹிஜாப் அகற்ற கல்லூரி நிர்வாகம் கூறியது. ஹிஜாப் அணிவதன் மூலம் யாருக்கும் இடையூறு ஏற்படவில்லை. நாங்கள் இஸ்லாமை பின்பற்றுகிறோம். ஹிஜாப் குறித்து குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. இதை படித்தால் தெளிவு கிடைக்கும்.

மதமும், கல்வியும்...
கர்நாடக அரசின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. ஆனால் தற்போது ஏமாற்றமடைந்ததாக உணர்கிறோம். மதம், கல்வி இரண்டுமே நமக்கு முக்கியம். இவற்றில் ஒன்றை மட்டும் தேர்வு செய்யுங்கள் என அவர்களால் எப்படி கூற முடியும்?. இது உணவு, தண்ணீர் ஆகியவற்றில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய வலியுறுத்துவது போன்றது. இதில் ஒன்றை வைத்து மட்டும் வாழ முடியுமா?. மதமும், கல்வியும் அப்படித்தான். ஹிஜாப் தடை என்பது எங்களின் கல்வியை பாதிக்கிறது. தேர்வுகள் எழுத முடியாத சூழல் உள்ளது. ஹிஜாப்பை அனுமதிக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.

திரும்பி செல்லும் மாணவிகள்
இதற்கிடையே ஹிஜாப் தடையால் இன்றும் பல மாணவிகள் கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை. கலபுரகி மாவட்டம் ஜீவர்கி தாகா அரசு பியூ கல்லூரி உள்பட பல கல்லூரிகளில் தேர்வு எழுத வந்த மாணவிகள் ஹிஜாப்புடன் அனுமதிக்க கோரிக்கை வைத்தனர். ஆனால் கல்லூரி நிர்வாகங்கள் மறுத்ததால் அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு சென்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications