For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் முடிவுகளால் சோகத்தில் லாலு பிரசாத் யாதவ் செய்த காரியம்.. மருத்துவர்கள் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

ராஞ்சி: தேர்தல் முடிவுகளை பார்த்ததில் இருந்து மதியம் சாப்பிட மறுத்த லாலு பிரசாத் யாதவ் கடைசியாக மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று நேற்ற மதியம் உணவு அருந்தி உள்ளார்.

காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் பீகாரில் மக்களவை தேர்தலை சந்தித்து.

RJD leader Lalu Prasad Skipping Lunch Since eletion result date but finally yesterday taking

இந்த தேர்தலில் ஒரு இடங்களில் கூட ராஷ்ட்ரிய ஜனதா தளம் வெற்றி பெறவில்லை. கூட்டணி கட்சியான காங்கிரஸ் மட்டும் ஒரு இடத்தில் வென்று இருந்தது. லாலுவின் இளைய மகள் மிஷா பாரதியை பாஜக இணையமைச்சர் ராம்கிரிபால் யாதவ் இந்த முறையும் தோற்கடித்துள்ளார். தேர்தல் முடிவுகளை கடந்த 23ம் தேதி வாக்கு எண்ணிக்கைய பார்த்த லாலு பிரசாத் யாதவ், கடும் சோகத்தில் உள்ளார். இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக மதியம் சாப்பிடாமல் தவிர்த்து வந்தாராம்.

தற்போது ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லாலுவுக்கு சர்க்கரை வியாதி,கிட்னி பிரச்னை, ரத்த அழுத்தம் உள்ளிட்டவை இருப்பதால் அவருக்கு கடந்த டிசம்பர் 2017 முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாரணாசியில் மோடியை பார்த்தீங்களே.. அவர் காரை கவனிச்சீங்களா? வாரணாசியில் மோடியை பார்த்தீங்களே.. அவர் காரை கவனிச்சீங்களா?

இந்நிலையில் தேர்தல் முடிவுகளால் விரக்தி அடைந்த லாலு, தினமும் மதியம் சாப்பிடாமல் சோகத்தில் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், உடல் நிலை மோசமாக பாதிக்கப்படும் என்பதை எடுத்துக்கூறி அவரை நேற்று மதியம் சாப்பிட வைத்துள்ளனர்.

English summary
RJD leader Lalu Prasad Skipping Lunch Since eletion result date over worry of RJD loss in bihar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X