For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடைகிறது லாலு கட்சி! 13 எம்.எல்.ஏக்கள் நிதிஷ்குமாருக்கு ஆதரவு!

By Mathi
Google Oneindia Tamil News

லக்னோ: பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி இரண்டாக உடைகிறது. அக்கட்சியின் 13 எம்.எல்.ஏக்கள் முதல்வர் நிதிஷ்குமாரை ஆதரிப்பதாக அம்மாநில சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

லோக்சபா தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கின்றன. இத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் இடம்பெற்றுள்ளது.

RJD set to split in Bihar Assembly, 13 MLAs revolt against Lalu

ஆனால் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிக்கு அக்கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன் உச்சகட்டமாக அக்கட்சியின் 13 எம்.எல்.ஏக்கள் முதல்வர் நிதிஷ்குமாருக்கு ஆதரவு தெரிவித்து, ஐக்கிய ஜனதா தளத்தில் இணைய முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக சபாநாயகருக்கு கடிதத்தையும் அவர்கள் அனுப்பியுள்ளனர். லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் எம்.எல்.ஏக்கள் கூண்டோடு கட்சி மாறியது லாலுவுக்கு மிகப் பெரும் பின்னடைவாகும்.

இதுபற்றி அதிருப்தி எம்.எல்.ஏ. சாம்ராட் சவுத்ரி கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் 'பி' அணி போல் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சி செயல்படுகிறது. இதனாலேயே கட்சி மாற முடிவு செய்துள்ளோம் என்றார்.

English summary
In a big setback to Lalu Prasad Yadav's Rashtriya Janata Dal just before the upcoming Lok Sabha polls, thirteen MLAs have left the party and may join the JD(U).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X