ஹெல்மெட் போடுங்க பாஸ் லைஃப் நல்லா இருக்கும்... கேரளாவில் சச்சின் ஜாலி பிரச்சாரம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், வாகன ஒட்டிகள் கண்டிப்பாக ஹெல்மட் அணிய வேண்டும் எனக் கூறியுள்ளார். கேரளாவில் காரில் சென்று கொண்டிருந்த போது, தன்னுடைய ரசிகர்களுக்கு காரில் இருந்த படியே இவ்வாறு கூறியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கேரளாவிற்கு சுற்றி பார்க்க சென்று இருக்கிறார். அப்போது அவர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நீடித்தது.

 Sachin advised people to wear helmet while driving

திருவனந்தபுரத்தில் உள்ள முதல் அமைச்சர் அலுலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, விரைவில் தொடங்க உள்ள ஐ.எஸ்.எல் கால்பந்து தொடருக்கு அரசின் உதவியை கோரியிருக்கிறார் என்பது போன்ற செய்திகள் வெளியாகியுள்ளன. சச்சின் டெண்டுல்கர் கேரளா பிளாஸ்டர்ஸ் எனும் கால்பந்து அணியின் உரிமையாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் கேரள முதல்வரை சந்திக்க செல்லும் வழியில் சாலையில் சென்றவர்களிடம் ஹெல்மெட் அணியுமாறு கூறியிருக்கிறார். மேலும் முன் இருக்கையில் உள்ளவர்கள் மட்டும் இல்லாமல் பின் இருக்கையில் இருப்பவர்களும் கண்டிப்பா ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அவர் சாலையில் தனது கார் கண்ணாடியை இறக்கி மக்களிடம் பேசியது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த பேச்சு கேரள மக்களை பெரிதும் கவர்ந்து இருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sachin advised people to wear helmet while driving in Kerala. He went to Kerala with his wife to meet Kerala CM Pinarayi Vijayan.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற