For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஷாருக்கான் ஒரு பாகிஸ்தான் ஏஜெண்ட்.... பாகிஸ்தானில் குடியேறட்டும்... சொல்வது சாத்வி பிராச்சி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் சகிப்புத் தன்மை குறித்து கவலை தெரிவித்த இந்தி நடிகர் ஷாருக்கான், ஒரு பாகிஸ்தான் ஏஜெண்ட்.. அவர் பாகிஸ்தானில் போய் குடியேறட்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சர்ச்சைக்குரிய தலைவர் சாத்வி பிராச்சி கூறியுள்ளார் .

ஷாருக்கான் நேற்று தன்னுடைய 50-வது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார். இதையொட்டி ஷாருக்கான், நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்திருந்தார்.

Sadhvi Prachi calls ShahRukh Khan a 'Pakistani Agent'

மேலும் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு; இங்கே கருத்து சுதந்திரம் உண்டு என்று கூறியிருந்தார். இதை சுட்டிக்காட்டியுள்ள சாத்வி பிராச்சி, மத்திய அரசின் விருதுகளை திருப்பிக் கொடுப்பவர் ஷாருக்கான் உட்பட யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களை ஆதரிக்கிற ஷாருக்கான் ஒரு பாகிஸ்தான் ஏஜெண்ட், அவர் பாகிஸ்தானில் போய் குடியேற வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதே சாத்வி பிராச்சிதான், ஷாருக்கான் கான், சல்மான் கான், ஆமிர்கான் ஆகியோர் நடித்த படங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Hindu rights activist and Vishwa Hindu Parishad (VHP) leader Sadhvi Prachi on Monday targeted Bollywood superstar Shahrukh Khan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X