சிறையில் சில நாள்... சொகுசு அபார்ட்மெண்ட்டில் பல நாட்கள்.. செமையாக வாழ்ந்துள்ள சசிகலா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, 13 நாட்கள்தான் சிறைக்குள் இருந்தார் என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். கைதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அவர் தங்கியது சொற்ப நாட்கள் மட்டும்தானாம்.

சிறை தண்டனை பெற்ற கைதியான சசிகலா பெங்களூரு சிறைக்கு வெளியே சொசுகு அபார்ட்மெண்டில் தங்கியிருந்தார் என்றும் தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு விதிகளை மீறி சொகுசாக வாழ்ந்துள்ளார் சசிகலா. அதற்கான வீடியோ ஆதாரங்களும் சிக்கியுள்ளன.

13 நாட்கள்தான் சிறை அறை

13 நாட்கள்தான் சிறை அறை

கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அந்த நாள் முதல் மொத்தம் 13 நாட்கள்தான் சசிகலா சிறையில் அவருக்கென ஒதுக்கப்பட்ட அறையில் இருந்துள்ளார். அப்போது அவர் பார்வையாளர்களைச் சந்தித்துள்ளார்.

விதிமீறல்

விதிமீறல்

பொதுவாக சிறையில் கைதிகளை அவர்களுடைய உறவினர்கள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பார்க்க முடியும். ஆனால் சசிகலாவை அவரது உறவினர்கள் இந்த நேரத்தை தாண்டியும் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆவணங்கள் டி.ஐ.ஜி. ரூபாவிடம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களை உயர்மட்ட குழுவின் விசாரணை அதிகாரி வினய்குமாரிடம் ரூபா வழங்க உள்ளதாக தெரிகிறது.

சந்தித்தது எங்கே

சந்தித்தது எங்கே

சிறையில் இருந்தாலும் சசிகலா, பார்வையாளர்களை பார்த்த போது ரோலிங் சேரில் அமர்ந்து பேசுவார் என்றும் அவர் பார்வையாளர்களை சிசிடிவி கேமரா இருந்த அறையில் சந்திக்கவில்லை என்றும் வேறு எங்கோ சந்தித்து பேசியுள்ளார் என்றும் ரூபா கூறியுள்ளார்.

Jayalalitha also stayed in Parappana Agrahara prison like where Sasikala stays-Oneindia Tamil
முக்கிய ஆதாரங்கள்

முக்கிய ஆதாரங்கள்

சசிகலாவின் இந்த நடவடிக்கைகளுக்கு உறுதியான ஆதாரங்களை டிஐஜி ரூபா கைப்பற்றியுள்ளார். இந்த ஆதாரங்களை எல்லாம் டிஐஜி ரூபா, விசாரணை அதிகாரி வினய் குமாரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிஜிபி சத்தியநாராயணராவ்

டிஜிபி சத்தியநாராயணராவ்

இந்த ஆதாரங்களால் சிறைத் துறை டிஜிபியாக இருந்த சத்தியநாராயணராவ் பதவிக்கு சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அவர்தான் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு சசிகலாவிற்கு சலுகைகளை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேறு சிறைக்கு மாற்ற முடிவு

வேறு சிறைக்கு மாற்ற முடிவு

வினய்குமார் அளிக்கவுள்ள அறிக்கையில், சிறை விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதை உறுதிபடுத்தினால், அது பல்வேறு நெருக்கடிகளை சசிகலாவுக்கு ஏற்படுத்தும் என்கிறார்கள் பெங்களூரு வட்டாரத்தில். அதனால், சசிகலாவை தும்கூர் அல்லது மைசூரு சிறைக்கு மாற்றும் முடிவுக்கும் கர்நாடக அரசு செல்லும் என்று தெரிகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK AMMA Team General Secretary Sasikala stayed in Bangalore parappana agrahara jail only for 13 days, shocking report .
Please Wait while comments are loading...