For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்.பி.ஐ.யின் முட்டாள்தனத்தால் பல ஆயிரம் கோடிக்கு அதிபதியான வீட்டு வேலைக்காரப் பெண்!

Google Oneindia Tamil News

கான்பூர்: ஆயிரம் ரூபாய் நோட்டை எதிர்பாராதவிதமாக கண்ணில் பார்த்தாலே நமக்கு அடடா என்று ஆச்சரியம் மேலோங்கும்.. அதுவே ஆயிரக்கணக்கான கோடி பணத்தை இந்தா பிடி என்று கையில் திணித்தால் மாரடைப்பே வந்து விடும் அல்லவா.. அப்படித்தான் நடந்துள்ளது கான்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் முட்டாள்தனமான ஒரு காரியத்தால் அந்தப் பெண்ணின் கணக்கில் ஒரே நாளில் ரூ. 95 ஆயிரம் கோடி பணம் கணக்கி் சேர்ந்து அவரை அதிர வைத்துள்ளது.

அந்தப் பெண்ணின் பெயர் ஊர்மிளா யாதவ். இவருக்கு கான்பூர் விகாஸ் நகர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையில் கணக்கு உள்ளது.

SBI error makes Kanpur woman super rich

அப்படியே ஷாக் ஆயிட்டேன்...

சில நாட்களுக்கு முன்பு தனது வங்கிக்குச் சென்று கணக்கை அப்டேட் செய்து பார்த்த ஊர்மிளாவுக்கு அதிர்ச்சியி்ல் மயக்கம் வராத குறை. காரணம், அவரது வங்கிக் கணக்கில் ஒரே நாளில் ரூ. 95 ஆயிரத்து 71 கோடியே 16 லட்சத்து 98 ஆயிரத்து 647 ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டிருந்தது.

ஜன் தன் யோஜனா...

சாதாரண வீட்டு வேலை பார்க்கும் பெண் ஊர்மிளா. ரூ. 2000 மினிமம் பேலன்ஸ் போட்டு கணக்கைத் தொடங்கியிருந்தார் ஊர்மிளா. மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் இந்த கணக்கு தொடங்கப்பட்டது.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...

இதையடுத்து முதலில் அவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. அதில் ரூ. 9,99,999 உங்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. அடுத்து இன்னொரு மெசேஜ் வந்தது. அதில் ரூ. 9.97 லட்சம் கணக்கு வைக்கப்பட்டதாக கூறியது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

ரூ. 95 ஆயிரம் கோடி சொச்சம்...

ஆனால் இதை விட பெரிய அதிர்ச்சி அவரது வங்கிக் கிளைக்குப் போனபோது ஏற்பட்டது. தனக்கு கணக்கு தொடங்க உதவிய லால்தா பிரசாத் திவாரி என்பவருடன் வங்கிக் கிளையில் போய் விசாரித்தபோது அங்கு கணக்கை பரிசோதித்தபோது அவரது கணக்கில் ரூ. 95 ஆயிரம் கோடி சொச்சம் பாக்கி இருப்பதாக தெரிய வந்து மேலும் அதிர்ச்சி ஏற்பட்டது.

முட்டாள்தனமான வேலை...

வங்கி அதிகாரிகளும் இப்போது அதிர்ச்சியில் மூழ்கினர். உடனடியாக மேலாளர் உள்ளிட்டோர் உஷார்படுத்தப்பட்டனர். ஆனால் விசாரணைக்குப் பின்னர்தான் நடந்தது வேண்டும் என்றே வங்கித் தரப்பில் செய்யப்பட்ட ஒரு முட்டாள்தனமான வேலை என்று தெரிய வந்தது.

வங்கியின் உக்தி...

அதாவது ஊர்மிளாவின் வங்கிக் கணக்கு சில காலமாக முடங்கிப் போயிருந்தது. அவர் செயல்படுத்தாமல் விட்டு வைத்திருந்தார். இதுபோன்ற கணக்குகளை நிரந்தரமாக மூட வங்கி சார்பில் ஒரு உத்தியைக் கையாளுகிறார்களாம். அதாவது பெரிய தொகையை அந்தக் கணக்குக்கு டிரான்ஸ்பர் செய்து, அதை உடனடியாக எடுத்து விட்டு கணக்கை முடித்து விடுவார்களாம்.

மறதி...

இதுபோலத்தான் ஊர்மிளா கணக்கில் பெரிய தொகையை ஏற்றியுள்ளனர். ஆனால் அதை எடுக்க மறந்து விட்டனர். இதனால்தான் குழப்பமாகியுள்ளது.

விசாரணை தேவை...

இதுகுறித்து அபிஷேக் குப்தா என்ற ஆடிட்டர் கூறுகையில், "வங்கி விதிமுறைகளின்படி இப்படி கணக்கு வைத்திருப்போருக்குத் தெரியாமல் அவரது கணக்கில் யாரும் பணத்தை ஏற்றவோ, எடுக்கவோ முடியாது. இது சட்டவிரோதமான செயல். நடந்த தவறுக்கு வங்கிதான் முழுப் பொறுப்பாகும். இப்படிச் செய்வதில் எந்த வகையில் அறிவார்ந்த செயல் என்று தெரியவில்லை. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றார்.

ரூ. 2000 போதும்...

ஊர்மிளாவுக்கோ வேறு கவலை. "எனது கணக்கில் என்ன நடந்தது என்பது குறித்து எனக்குக் கவலை இல்லை. நான் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் ரூ. 2000 பத்திரமாக இருந்தால் எனக்குப் போதும்" என்கிறார் அவர்.

குழப்பம் தீர்ந்தது...

அவரது கவலையை உடனடியாக வங்கி போக்கி விட்டது. தற்போது அவரது கணக்கு சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளது. பேலன்ஸ் தொகை ரூ. 2000 என்று காட்டுகிறதாம்.

English summary
SBI accounting error makes this Kanpur woman super rich for a day
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X