For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

BREAKING NEWS: சபரிமலையில் அனைத்துப் பெண்களுக்கும் அனுமதி! .. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது .

Google Oneindia Tamil News

டெல்லி: கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது .

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களையும் அனுமதிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியாகி உள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.

Recommended Video

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி- சுப்ரீம்கோர்ட்- வீடியோ
    SC will give its verdict today on Entry of Women into Sabarimala - LIVE UPDATES

    சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 5 நீதிபதிகளில் 4 பேர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர். நீதிபதி இந்து மல்ஹோத்ரா தனி தீர்ப்பு வழங்குவார்.

    Newest First Oldest First
    1:48 PM, 28 Sep

    சபரிமலை தீர்ப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு

    ஆணும், பெண்ணும் சரிநிகர் சமம் என்ற பயணத்தில் மைல் கல் - ஸ்டாலின்

    11:28 AM, 28 Sep

    சபரிமலை தீர்ப்புக்கு தமிழக பெண்கள் வரவேற்பு

    சேலத்தில் இனிப்பு கொடுத்து பெண்கள் கொண்டாட்டம்

    11:18 AM, 28 Sep

    தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு செய்வோம்- திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவிப்பு

    தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் அறிவிப்பு

    11:15 AM, 28 Sep

    சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கூடாது - நீதிபதி இந்து மல்ஹோத்ரா

    நீதிபதி இந்து மல்ஹோத்ரா தனி தீர்ப்பு

    11:11 AM, 28 Sep

    சபரிமலை தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவிற்கு கேரள அரசு வரவேற்பு
    10:57 AM, 28 Sep

    5 நீதிபதிகளில் 4 பேர் ஒரே தீர்ப்பு
    10:54 AM, 28 Sep

    சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி - உச்ச நீதிமன்றம்
    10:54 AM, 28 Sep

    எல்லா வயது பெண்களையும் சபரி மலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும்- உச்சநீதிமன்றம் உத்தரவு
    10:53 AM, 28 Sep

    ஐயப்ப வழிபாடு என்பது தனி மதம் அல்ல, இந்து மதத்தோடு இணைந்தது- உச்சநீதிமன்றம்
    10:53 AM, 28 Sep

    சபரிமலை வழிபாட்டில் பெண்களுக்கு பாகுபாடு காட்டக்கூடாது: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா
    10:53 AM, 28 Sep

    சபரிமலை வழக்கு: 4 நீதிபதிகள் ஒரே தீர்ப்பளிக்கிறார்கள்

    நீதிபதி இந்து மல்ஹோத்ரா தனி தீர்ப்பு

    10:50 AM, 28 Sep

    பெண்கள் எந்த விதத்திலும் ஆண்களை விட குறைந்தவர்கள் இல்லை - தலைமை நீதிபதி

    பெண்களை ஒரு பக்கம் கடவுளாக மதிக்கிறார்கள் - தலைமை நீதிபதி

    இன்னொரு பக்கம் கட்டுப்பாடும் விதிக்கிறார்கள் - தலைமை நீதிபதி

    10:48 AM, 28 Sep

    5 நீதிபதிகளில் 3 பேர் ஒரே தீர்ப்பை அளிக்கின்றனர்

    2 நீதிபதிகள் தனித் தனியாக தீர்ப்பளிக்கின்றனர்

    10:48 AM, 28 Sep

    நீண்ட காலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது - தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா
    10:47 AM, 28 Sep

    சபரிமலை வழக்கு: தலைமை நீதிபதி தீர்ப்பை வாசிக்கிறார்
    10:47 AM, 28 Sep

    எந்த தீர்ப்பாக இருந்தாலும் பின்பற்றுவோம் - தேவஸ்தானம்
    10:42 AM, 28 Sep

    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நீதிபதி கான்வில்கர் தீர்ப்பை ஒரே தீர்ப்பை வழங்குகிறார்கள்
    10:17 AM, 28 Sep

    சபரிமலை வழக்கு: மொத்தம் 4 நீதிபதிகள் தீர்ப்பளிக்கிறார்கள்

    5 நீதிபதிகள் அமர்வில் 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவார்கள்

    இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்ந்த பொதுநல வழக்கில் தீர்ப்பு

    10:07 AM, 28 Sep

    சபரிமலை வழக்கு 30 வருடமாக பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து வருகிறது.

    1991ல் முதன்முதலாக சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது.

    1991ல் எஸ். மஹாதேவன் என்ற நபர் கேரளா ஹைகோர்ட்டில் இந்த வழக்கை தொடுத்து இருந்தார்.

    10:07 AM, 28 Sep

    1991ம் இறுதியில் வருடம் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

    சபரிமலை தேவஸ்தான விதியின் படியும் இது சரியானது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

    10:06 AM, 28 Sep

    2006ல் பிரபல சாமியார் ஒருவர் இந்த கோவிலில் பூஜை நடத்தினார்.

    பூஜைக்கு முடிவில் இந்த கோவிலுக்குள் வயது வந்த பெண் ஒருவர் முன்பு வந்து உள்ளார், என்று கூறினார்.

    10:06 AM, 28 Sep

    2006ல் பிரபல சாமியார் ஒருவர் இந்த கோவிலில் பூஜை நடத்தினார்.

    பூஜைக்கு முடிவில் இந்த கோவிலுக்குள் வயது வந்த பெண் ஒருவர் முன்பு வந்து உள்ளார், என்று கூறினார்.

    10:06 AM, 28 Sep

    2006ல் கன்னட நடிகை ஜெயமாலா சபரிமலை கோவிலுக்குள் வந்ததாக கூறினார்.

    1987ல் 28 வயது இருக்கும் போது வந்ததாக கூறி ஜெயமாலா பரபரப்பை ஏற்படுத்தினார்.

    10:06 AM, 28 Sep

    2006ல் இது குறித்து விசாரிக்க கேரள கிரைம் பிரிவிற்கு உத்தரவு பிறப்பித்தது அம்மாநில அரசு.

    2006 இறுதியில் இந்த விசாரணை தள்ளுபடி செய்யப்பட்டது

    10:06 AM, 28 Sep

    2006 இறுதியில் கேரளா இளம் வழக்கறிஞர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தது.

    சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தது.

    10:05 AM, 28 Sep

    2 வருட காத்திருப்பிற்கு மார்ச் 7ம் தேதி 2008ம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்விற்கு சென்றது.

    7 வருடம் இந்த வழக்கு விசாரிக்கப்படவில்லை.

    எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் வழக்கு கிடப்பில் போடப்பட்டது.

    10:05 AM, 28 Sep

    2016 ஜனவரி 11ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

    2017ம் ஆண்டு இந்த வழக்கு பிப்ரவரி மாதம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டது.

    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

    10:05 AM, 28 Sep

    கடந்த ஜூலையில், கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று கேரள அரசு தெரிவித்தது.

    ஆனால் கோவில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது.

    10:05 AM, 28 Sep

    சென்ற மாதம் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்தது.

    இந்த மாத இறுதியில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

    9:22 AM, 28 Sep

    சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

    சபரிமலை கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைய தடை

    தடையை எதிர்த்து இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

    READ MORE

    English summary
    SC will give its verdict today on Entry of Women into Sabarimala.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X