For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலாம் மறைவு: புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், 11 வது குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் அவர்கள் நேற்று மாரடைப்பால் காலமானார். அதனையடுத்து இன்று புதுச்சேரி முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படவும் உள்ளது.

முன்னாள் குடியரசுத்தலைவரான அப்துல் கலாம் அவர்கள் இன்று மாலை மேகலாயாவில் அமைந்துள்ள ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். அதனையடுத்து ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

akalam

இதனையடுத்து இந்தியாவில் 7 நாட்கள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. மேலும், 7 நாட்களும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கனவு நாயகனான அவரின் மறைவிற்காக இன்று புதுச்சேரி முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

English summary
Schools and colleges on leave tomorrow for condolence to Former president Abdul kalam's death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X