For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆம் ஆத்மியில் இருந்து ஷாஷியா இல்மி, கேப்டன் கோபிநாத் விலகல்!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷாசியா இல்மி மற்றும் கேப்டன் கோபிநாத் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

Shazia Ilmi to quit Aam Aadmi Party today?

ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், டெல்லி சட்டசபை தேர்தலில் ஆர்.கே.புரம் தொகுதியிலும் நாடாளுமன்ற தேர்தலில், காசியாபாத் தொகுதியில் விகே சிங்கை எதிர்த்து போட்டியிட்டு இரண்டிலுமே ஷாஷியா இல்மி தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் ஷாஷியா இல்மி டெல்லியில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது ஆம் ஆத்மி கட்சியில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்தார். மேலும் ஆம் ஆத்மியில் ஜனநாயகம் இல்லை என்றும் ஷாஷியா குற்றம்சாட்டியுள்ளார்.

அதேபோல் ஏர்டெக்கான் எனும் பெயரில் குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்கியவரான கேப்டன் கோபிநாத்தும் ஆம் ஆத்மியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.

ஆம் ஆத்மியில் இருந்து அடுத்தடுத்து முக்கிய பிரபலங்கள் விலகுவது அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

English summary
Shazia Ilmi resigns from Arvind Kejriwal's Aam Aadmi Party, says "there's lack of democracy in AAP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X