ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய வீராங்கனை.. தங்கப் பதக்கம் பறிக்கப்பட வாய்ப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஊக்கமருந்து சோதனையில் இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து ஆசிய தடகளப் போட்டியில் அவர் வென்ற தங்கப்பதக்கம் பறிக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்திய முன்னணி தடகள வீராங்கனைகளில் ஒருவரான மன்பிரீத் கவுர் அண்மையில் புவனேஷ்வரில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்றார். குண்டு எறிதல் வீராங்கனையான அவர் 18.28 மீட்டர் தொலைவுக்கு அப்பால் குண்டை எறிந்தார்.

shot putter Manpreet Kaur fails dope test

இதன் மூலம் உலகின் நம்பர் ஒன் குண்டு எறிதல் வீராங்கணை என்ற பெருமையையும் பெற்றார். இந்நிலையில் அவர் ஊக்கமருந்து உட்கொண்டதாக சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை அவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தியது. இதில் மன்பிரீத் கவுர் ஊக்கமருந்து உட்கொண்டது நிருபணமாகியுள்ளது.

shot putter Manpreet Kaur fails dope test
Ravi Shastri's "chapati shot" will come soon-Oneindia Tamil

இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து தங்கப்பதக்கம் பறிக்கப்படும் எனத் தெரிகிறது. மன்பிரீத் அடுத்த மாதம் லண்டனில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஸ் போட்டிக்கு தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India’s leading shot putter and gold medalist in the just concluded Asian Athletics Championships, Manpreet Kaur has failed a dope test
Please Wait while comments are loading...