For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத் கக்ராபார் அணுமின் நிலையத்தில் கசிவு- முதலாவது அணு உலை மூடல், மூடல்

By Mathi
Google Oneindia Tamil News

சூரத்: குஜராத்தின் கக்ராபார் அணுமின் நிலையத்தில் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து முதலாவது அணு உலை மூடப்பட்டுள்ளது.

இந்தியாவில் அணு உலைகளை அமைக்கக் கூடாது என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக ஆண்டு கணக்கில் போராட்டங்கள் நடைபெறுகிறது.

Shutdown after leakage at Kakrapar power station

கேரளாவிலும், குஜராத்தின் பாவ்நகரிலும் அணு உலைக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குஜராத்தின் கக்ராபார் அணுமின் நிலையத்தில் இன்று காலை திடீரென கசிவு ஏற்பட்டது.

பிரைமரி ஹீட் டிரான்ஸ்போர்ட் எனப்படும் பகுதியில் சிறிய அளவில் கசிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக முதலாவது அணு உலைய் மூடப்பட்டுள்ளதாக இந்திய அணுசக்தி கழகம் அறிவித்துள்ளது.

English summary
Nuclear Power Corporation of India Limited, a Government of India enterprise today in a statement said that Unit-1 of Kakrapar Atomic Power Station in south Gujarat which was operating at its rated power was shutdown at about 9.00 hours today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X