டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடியுடன் நீரவ் மோடி: யெச்சூரி பரபர

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தொடர்புடைய நீரவ் மோடி டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பங்கேற்றது குறித்து மத்திய அரசு விளக்கம் தர மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ280 கோடி மோசடி செய்தவர் குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி. அதைத் தொடர்ந்து ரூ11,400 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக நீரவ் மோடி மீது அடுத்த புகார் கிளம்பியுள்ளது.

Sitaram Yechury questions Nirav Modi's presence with PM Modi

இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கப் பிரிவுகள் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் நீரவ் மோடி கடந்த மாதமே நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மோசடி வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதற்கு ஒரு வாரம் முன்பாக நீரவ் மோடி நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். டாவோஸில் பிரதமர் மோடி பங்கேற்ற மாநாட்டிலும் நீரவ் மோடி கலந்து கொண்டார். இது தொடர்பாக மத்திய அரசு விளக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் பிரதமர் மோடியுடன் நீரவ் மோடி இணைந்து எடுத்த புகைப்படத்தையும் யெச்சூரி பகிரிந்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CPM General Secretary SitaramYechury questions diamond jeweller Nirav Modi's presence at World Economic Forum meeting in Davos with PM Modi.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற