மேகதாதுவில் அணைக்கட்டக் கோரி கர்நாடகாவில் ஸ்ட்ரைக்.. பெங்களூரில் பள்ளிகள் மூடல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: மேகதாதுவில் அணைக்கட்டக்கோரி கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் பெங்களூருவில் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

மேகதாது அணை கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. கன்னட சலுவாலியா உள்ளிட்ட கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

கர்நாடக மாநில விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, கர்நாடகா செல்லும் தமிழக பஸ்கள் ஒசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.

பள்ளிகள் மூடல்

பள்ளிகள் மூடல்

கர்நாடக அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

சில பள்ளிகள் திறப்பு

சில பள்ளிகள் திறப்பு

பெரும்பாலான வணிக நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. ஏதேனும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறினால் பள்ளிகள் உடனடியாக மூடப்படும் என தெரிகிறது.

போலீசார் குவிப்பு

போலீசார் குவிப்பு

பெட்ரோல் பங்குகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. பல நகரங்களில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

பார்க்கில் ஆர்ப்பாட்டம்

பார்க்கில் ஆர்ப்பாட்டம்

கன்னடா ஒக்கூட்டா, கர்நாடகா பிலிம் சாம்பர் ஆகிய 2 குருப்புகள் பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. அவர்கள் ஃபிரிடம் பார்க்கில் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேகதாது அணை

மேகதாது அணை

கோவா, கர்நாடகா இடையிலான மகதாயி ஆற்றுப் பிரச்சனையை பிரதமர் மோடி தீர்த்து வைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மேகதாது அணைக்கட்ட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Public transport will not be affected and most businesses and schools will stay open, though this might change if there are violent protests.Most shops, businesses, schools and colleges will stay open, though some have declared holidays for precautionary reasons.
Please Wait while comments are loading...