டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி! சிம்லாவிலிருந்து ஏர் ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்டார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: உடல் நலக்குறைவினால் காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி சோனியாகாந்தி டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுப்பார்.

சோனியாகாந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு சிம்லா சென்றிருந்தார். அங்கு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படவே அவர் உடனடியாக டெல்லிக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டார். அங்குள்ள ஸ்ரீ கங்காராம் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Sonia admitted in Ganga ram hospital

வயிறு வலி பிரச்சினை தொடர்பாக சோனியாகாந்திக்கு சிகிக்சை அளிக்கப்படுவதாகவும், அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் ஆர்.எஸ். ராணா கூறியுள்ளார்.

சோனியாகாந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபுட் பாய்சன் காரணமாக சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sonia Gandhi admitted to Sir Ganga Ram Hospital in Delhi, suffering from stomach upset

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற