For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங். படுதோல்விக்கு பொறுப்பேற்று சோனியா, ராகுல் கட்சிப் பதவியில் இருந்து ராஜினாமா?

By Mathi
|

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் வரலாறு காணாத படுதோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை சோனியாவும் ராகுல் காந்தியும் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோக்சபா தேர்தலில் முதன் முறையாக பெருந்தோல்வியை சந்தித்துள்ளது காங்கிரஸ் கட்சி. எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூற பெற முடியாத அளவுக்கு வெறும் 44 இடங்களில்தான் அந்த கட்சி வென்றுள்ளது.

Sonia, Rahul might offer resignation to the CWC

இத்தகைய மோசமான தோல்விக்கு தாங்கள் இருவரும் பொறுப்பேற்தாக நேற்று சோனியாவும், ராகுலும் தெரிவித்திருந்தனர். அதே நேரத்தில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தோல்வியடைந்ததற்காக அம்மாநில முதல்வர்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சோனியாவும் ராகுலும் தங்களது கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் அறிவிக்கக் கூடும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இருவரது ராஜினாமாவை காங்கிரஸ் ஏற்குமா என்பதும் சந்தேகத்துக்குரியது என்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்..

English summary
With Congress getting almost swiped in the general elections by Narendra Modi-led BJP, there are reports that Congress President Sonia Gandhi and Vice President Rahul Gandhi's defeat and its worst performance. Some Congress party sources have stated that both mother and son will present their resignation to the Congress Working Committee and as one knows the party leaders will refuse to accept it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X