For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராணியை விட பணக்காரர் சர்ச்சையில் சிக்கிய சோனியாவின் சொத்து மதிப்பு வெறும் ரூ 9 கோடி தானாம்...

|

டெல்லி: இங்கிலாந்து ராணியை விட பணக்காரர் என்றும், இல்லை என்றும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நேற்று தனது வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பென ரூ 9 கோடியைக் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உ.பி. மாநிலம் ரேபரேலி தொகுதியில் நேற்று தனது மகன் ராகுல் காந்தியுடன் வந்து வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். மனுத் தாக்கல் செய்வதற்காக ரேபரேலிக்கு வந்த சோனியா காந்திக்கு ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

Sonia's assets worth over Rs.9 crore

2 முறை இத்தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பியாகியுள்ள சோனியா காந்தி தற்போது 3வது முறையாக இங்கு போட்டியிடுகிறார். நேற்று சோனியா காந்தியுடன் அவரது மகனும், காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தியும் வந்திருந்தார். சோனியா அமர்ந்திருந்த காரை ராகுலே ஓட்டி வந்தார். வழியெங்கும் சோனியாவுக்கு ஆயிரக்கணக்கானோர் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது கார் மீது ரோஜாப் பூக்களும் தூவப்பட்டன.

சோனியா தனது வேட்பு மனுவில் இணைக்கப்பட்டுள்ள சொத்து விபரம் குறித்த தகவலில், தனக்கு ரூ.9.28 கோடி மதிப்பிலான சொத்துக்கள் தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது போன தடவை...

கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வேட்புமனுத் தாக்கலின் போது தனது சொத்து மதிப்பு ரூ 1.38 கோடி எனக் குறிப்பிட்டிருந்தார் சோனியா.

பரம்பரை வீடு மட்டும் தான்....

மேலும், அதில் தனக்கு இந்தியாவில் சொந்த வீடோ அல்லது காரோ இல்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இத்தாலியில் மட்டும் குடும்ப பரம்பரைச் சொத்தாக வோடி ஒன்று மட்டும் உள்ளதாகத் தெரிவித்திருந்த சோனியா, அதன் மதிப்பு ரூ 18.2 லட்சம் என்றும் தெரிவித்திருந்தார்.

12 வது பணக்காரர்...

இதற்கிடையே கடந்தாண்டு ஹஃபிங்டன் போஸ்ட் என்ற இணையதளம் உலக அரசியல் தலைவர்கள் இருபது பேரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டது. அதில் 12 வது இடத்தை சோனியா பிடித்திருந்தார்.

ரூ 12 ஆயிரம் கோடி சொத்து...

அந்த பத்திரிக்கையில் சோனியாவின் சொத்து மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலர் எனக் குறிப்பிடப் பட்டிருந்தது. அதாவது இந்திய மதிப்பில் 12 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

புள்ளி விவரங்கள் அடிப்படையில்...

தற்போது அதிகாரத்தில் இருக்கும் அரசியல் தலைவர்களின் சொத்துக்கள் குறித்து தாங்கள் திரட்டிய தகவல்கள் மற்றும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்தப் பட்டியலை வெளியிட்டதாக ஹஃபிங்டன் போஸ்ட் விளக்கமளித்தது.

ராணியை விட பணக்காரர்...

இந்த பட்டியலில் இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு 18வது இடமே கிடைத்தது. இதன் மூலம் அவரை விட சோனியா பணக்காரர் எனத் தெரிவிக்கப் பட்டது.

களங்கம் விளைவிக்கும் முயற்சி....

இந்தப் பட்டியல் குறித்தான செய்தி பத்திரிக்கையில் பரபரப்பாக வலம் வந்ததையடுத்து காங்கிரஸ் உடனடியாக தனது கண்டனத்தை ஹஃபிக்டன் போஸ்ட் இணைய தளத்துக்கு அனுப்பியது. அதில், எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வரும் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி இது எனக் குற்றம் சாட்டியது.

மன்னிப்பு...

காங்கிரஸின் கண்டனத்தைத் தொடர்ந்து அந்த பணக்காரத் தலைவர்கள் பட்டியலில் இருந்து சோனியா பெயரை நீக்கியது ஹஃபிங்டன் போஸ்ட் இணையதளம். தங்கள் பட்டியலால் உண்டான குழப்பத்திற்கு மன்னிப்பும் கோரியது.

எப்படி இது சாத்தியம்...?

இதற்கிடையே சமீபத்தில் ராஜீவ் சகோதரர் சஞ்சய்காந்தியின் மனைவி மேனகா காந்தி, ‘இந்தியாவின் மருமகளாக வந்த போது, வெறும் கையோடு வந்த சோனியா தற்போது கோடீஸ்வரர் ஆனது எப்படி என கேள்வி எழுப்பினார்.

ஆங்கிலேயர்களை விட...

மேலும், ஆங்கிலேயர்களை விட இந்தியாவைக் காங்கிரஸ்காரர்கள் நூறு மடங்கு அதிகமாக சுரண்டியுள்ளதாக அவர் அப்போது குற்றம் சாட்டினார்.

தற்போதைய சொத்துமதிப்பு...

இந்நிலையில் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்த சோனியாகாந்தி, அதில் தனது சொத்து மதிப்பு என ரூ 9.28 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார்.

மகனுக்கு கடனாக...

அதில் தனது மகனும், காங்கிரஸ் துணைத்தலைவருமான ராகுல்காந்திக்கு தான் ரூ 9 லட்சம் கடனாகக் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

6 மடங்கு அதிகம்...

சோனியாவின் சொத்தில் ரூ.2.81 கோடி அசையும் சொத்துக்களாகவும், ரூ.6.47 கோடி அசையா சொத்துக்களாகவும் உள்ளன. இது கடந்த தேர்தலில் அவர் குறிப்பிட்டிருந்த சொத்து மதிப்பை விட 6 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அசையும் சொத்துக்கள்...

அசையும் சொத்துக்களில் ரூ.85 ஆயிரம் ரொக்கமாகவும், ரூ.66 லட்சம் வங்கியிலும், ரூ.10 லட்சம் பாண்டு பத்திரங்களாகவும், ரூ.1.90 லட்சம் பங்குகளாகவும் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நகைகளாக....

இதுதவிர, ரூ.82.20 லட்சம் மியூச்சுவல் பண்டுகளிலும், வருங்கால வைப்பு நிதியில் ரூ.42.49 லட்சமும், ரூ.2.86 லட்சம் தேசிய சேமிப்பு திட்டத்திலும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. ரூ.62 லட்சம் ஆபரண நகைகளாகவும் உள்ளனவாம்.

பரம்பரை சொத்து...

அசையா சொத்துக்களில், தேராமண்டி கிராமத்தில் ரூ.4.86 கோடி மதிப்புள்ள நிலம், சுல்தான்பூர் கிராமத்தில் ரூ.1.40 கோடி மதிப்புள்ள நிலம் தவிர இத்தாலியில் ரூ.19.90 லட்சம் மதிப்பிலான பரம்பரை சொத்தும் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த வாகனமில்லை...

மேலும், அவருடைய 2012-13ம் ஆண்டு வருமான வரி கணக்கில், ரூ.14.21 லட்சம் வருமானம் வந்துள்ளதாகவும், எனினும், சோனியா தனது பெயரில் எந்த வாகனமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் விளக்கம்...

கடந்த முறை சொத்துக்களின் மதிப்பு புத்தக மதிப்பின் அடிப்படையிலேயே கணக்கிடப்பட்டதாகவும், ஆனால் இந்த முறை நடப்பு சந்தை விலையின் அடிப்படையில் மதிப்பிடப்படுவதால் சோனியாவின் சொத்து மதிப்பு அதிகரித்திருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளன.

English summary
Congress president Sonia Gandhi has assets worth over Rs 9.28 crore though she does not have a vehicle in her name.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X