இந்திய விண்வெளி வரலாற்றில் சாதனை.. ஆஸாதி சாட்டிலைட்டை 750 அரசு பள்ளி மாணவிகள் உருவாக்கியது எப்படி?
ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி துறையில் முதல் முறையாக எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் 2 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு 75 அரசு பள்ளி மாணவிகள் உதவி செய்துள்ளனர். இது எப்படி சாத்தியமானது என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
Recommended Video
விண்வெளி துறையில் வளர்ந்த நாடுகளுக்கு போட்டியாக இந்தியா சார்பில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. இதனால் விண்வெளி துறையில் ஆண்டுதோறும் இந்தியாவின் வளர்ச்சி என்பது சிறப்பானதாக உள்ளது.
இந்தியாவில் எடை அதிகமான செயற்கைகோள்கள் பிஎல்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது. இதற்கு மாற்றாக எஸ்எஸ்எல்வி எனும் ராக்கெட் மூலம் எடை குறைந்த செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. இதற்கான திட்டம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான (இஸ்ரோ) சார்பில் எஸ்எஸ்எல்வி எனும் சிறிய ராக்கெட் திட்டம் முன்னெடுக்கப்பட்டது

2 ராக்கெட்டுடன் பாய்ந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட்
இதையடுத்து 500 கிலோ எடையிலான செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த பயன்படும் வகையில் எஸ்எஸ்எல்வி ராக்கெட் வடிவமைப்பு பணியை இஸ்ரோ மேற்கொண்டது. இந்த ராக்கெட்டில் இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைகோள் இஒஎஸ்-02 மற்றும் அரசு பள்ளி மாணவிகள் உருவாக்கிய ஆசாதிசாட் (8 கிலோ) செயற்கைகோள்களை ஏவ திட்டமிடப்பட்டது. இதையடுத்து இந்த 2 செயற்கைக்கோள்களுடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை விண்ணில் பாய்ந்தது. இன்று அதிகாலை 3.18 மணிக்கு 6 மணிநேர கவுண்ட்டவுன் துவங்கிய நிலையில் எஸ்எஸ்எல்வி ராக்கெட் காலை 9.18 மணிக்கு இரு செயற்கைகோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்து சாதனை படைத்தது.

மாணவிகள் தயாரித்த செயற்கைோள்
இதில் இஸ்ரோவின் இஓஎஸ் - 02 செயற்கைகோளானது புவி-சுற்றுச்சூழல் ஆய்வுகள், வானியல், நீரியல், விவசாயம், மண் மற்றும் கடலோர ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. மேலும் வெப்ப நிலை மாற்றங்கள் குறித்த தகவல்களை சேகரித்து வழங்க உள்ளது. மாணவிகள் தயாரித்த அசாதி சாட் செயற்கைகோளானது 8 கிலோ எடை கொண்டது. இது சோலார் பேனல்களை படம்பிடிக்கும் செல்பி கேமராவுடன் தரவுகளை படம்பிடித்து பூமிக்கு அனுப்ப உள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் அசாதிசாட் எனும் செயற்கைகோள் நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள 75 அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் மூலம் உருவாக்கப்பட்டு விண்வெளிக்கு செலுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியது சாதித்துள்ளனர்.

காரணம் என்ன
இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அசாதிசாட் எனும் சிறிய செயற்கைகோள் தயாரிக்க திட்டமிடப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் மூலம் உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இஸ்ரோவின் அறிவுறுத்தலின்பேரில் தமிழகத்தில் மதுரை திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் 10 பேர் உள்பட மொத்தம் 75 அரசு பள்ளி மாணவிகள் இந்த பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளனர். தற்போது மாணவிகள் தயாரித்த அசாதிசாட் செயற்கைகோள் விண்ணுக்கு பரந்துள்ளது.

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா
இதற்காக 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' மாணவர் குழு உருவாக்கப்பட்டு இஸ்ரோவால் ஒருங்கிணைக்கப்பட்டது. இதன்மூலம் பள்ளி மாணவர்கள் மத்தியில் விண்வெளி ஆய்வு குறித்த ஆர்வம் ஏற்படுவதுடன், அவர்களை அத்துறையில் சாதிக்க தூண்டும். தற்போது இந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளதால் மீண்டும் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

எஸ்எஸ்எல்வியின் சிறப்பு என்ன?
தற்போது விண்ணில் செலுத்தப்பட்டுள்ள இஓஎஸ் - 02 மற்றும் அசாதிசாட் செயற்கோள்கள் தாழ் புவி சுற்றுப்பாதையில் 500 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. விண்ணில் அடுத்த 13 வது நிமிடத்தில் இலக்காக நிிர்ணயிக்கப்பட்ட புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் பணி துவங்குவதாக அறிவிக்கப்பட்து. மேலும் எடை குறைந்த செயற்கைகோள்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் 120 டன்கள் மட்டுமே சுமந்து செல்ல முடியும். அதோடு பிஎஸ்எல்வி ராக்கெட் 44 மீட்டர் உள்ள நிலையில் எஸ்எஸ்எல்வி ராக்கெட் 34 மீட்டர் நீளத்தில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications