For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுனந்தா பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சசி தரூர் தலையிடவில்லை - டிரிப்யூனல்

Google Oneindia Tamil News

டெல்லி: சுனந்தா புஷ்கரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது கணவர் சசி தரூர் தலையிடவில்லை, குறுக்கீடு செய்யவில்லை என்று மத்திய நிர்வாக டிரிப்யூனல் தெரிவித்துள்ளது.

முன்னதாக பிரேதப் பரிசோதனையில் மாற்றம் செய்யுமாறு எய்ம்ஸ் டாக்டர் சுதீர் குப்தாவுக்கு தரூர் நெருக்கடி கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Sunanda Pushkar case: Tharoor did not influence autopsy report, says Tribunal

இதுகுறித்து டாக்டர் குப்தா, மத்திய நிர்வாக டிரிப்யூனலிடம் புகார் கொடுத்திருந்தார். இ்நதப் புகாரை டிரிப்யூனல் விசாரித்து வருகிறது. அந்தப் புகாரில், சுனந்தா புஷ்கரின் பிரேதப் பரிசோதனையில் திருத்தம் செய்யுமாறு தனக்கு தரூரிடமிருந்து நெருக்கடி வந்ததாக கூறியிருந்தார் குப்தா.

இதுகுறித்து ராஜ் வீர் சர்மா மற்றும் அசோக் குமார் ஆகியோர் அடங்கிய டிரிப்யூனல் விசாரணை நடத்தியது. விசாரணைக்குப் பின்னர் அவர்கள் கூறுகையில், டாக்டர் குப்தாவின் புகார் அடிப்படை இல்லாதது.

அவதூறு கற்பிக்கும் நோக்கம் கொண்டது. சசி தரூர் எந்த வகையிலும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தலையிடவில்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளதுஎன்று கூறியுள்ளனர்.

முன்னதாக குப்தா கூறியிருந்த புகாரில், என்னை இந்த வழக்கிலிருந்து ஓரம் கட்ட முயற்சி நடந்தது. அறிக்கையை தனக்கு சாதகமாக எழுதுமாறு தரூர் தரப்பிலிருந்து நான் நெருக்குதலுக்குள்ளாக்கப்பட்டேன். என் மீது அவதூறை ஏற்படுத்தி என்னை ஒழித்துக் கட்ட முயற்சித்தனர் என்ரறு கூறியிரு்தார் டாக்டர் குப்தா.

ஆனால் டிரிப்யூனல் விசாரணையிலேோ, எந்த வகையிலும் குப்தாவுக்கு நெருக்கடி வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் சொல்வது போல எதுவுமே நடக்கவில்லை என்றும் டிரிப்யூனல் கூரியுள்ளது.

English summary
There is nothing on record to suggest that Dr Sudhir Gupta of the All India Institute of Medical Sciences (AIIMS) was pressurized to submit a tailor made autopsy report of Sunanda Pushkar, a Central Administrative Tribunal has held.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X