For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்கள் டுவீட்டுகள் தாளமுடியாத வலியை தருகின்றன- சுஷ்மா ஸ்வராஜின் கணவர் உருக்கம்

உங்கள் டுவீட்டுகள் தாளமுடியாத வலியை தருகின்றன என்று சுஷ்மா ஸ்வராஜின் கணவர் உருக்கமாக தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சுஷ்மா ஸ்வராஜை திட்டிய டீவீட்டை பார்த்த கணவர் உருக்கம்- வீடியோ

    டெல்லி: உங்கள் டுவீட்டுகள் தாள முடியாத வலியை எங்கள் குடும்பத்திற்கு தருகின்றன என்று சுஷ்மா ஸ்வராஜின் கணவர் உருக்கமாக தெரிவித்தார்.

    கடந்த 20-ஆம் தேதி லக்னோவில் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு ஒரு தம்பதி பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் கணவர் முஸ்லிம், மனைவி இந்து சமூகத்தினர் ஆவர். அப்போது அங்கிருந்த அதிகாரி விகாஸ் மிஷ்ரா, கணவரை இந்து மதத்துக்கு மாறுங்கள் என்றும் இல்லாவிட்டால் மனைவியாவது முஸ்லிம் சமூகத்திற்கு மாறுங்கள் என்றும் கலப்பு திருமண தம்பதிக்கு பாஸ்போர்ட் கொடுக்க இயலாது என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

    இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் கவனத்துக்கு எட்டியது. இதையடுத்து விகாஷ் மிஸ்ராவை லக்னோவிலிருந்து கோரக்பூருக்கு பணியிடமாற்றம் செய்துவிட்டார்.

    டுவிட்டரில் வாக்குப் பதிவு

    டுவிட்டரில் வாக்குப் பதிவு

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் சுஷ்மாவை வறுத்தெடுக்கின்றனர். மேலும் மிஸ்ரா தனது கடமையைதானே செய்தார், அவரை ஏன் பணியிட மாற்றம் செய்தீர்கள் என்று கேட்கத் தொடங்கினர். இது தொடர்பாக சுஷ்மா, டுவிட்டரில் வாக்குப் பதிவையும் நடத்தினார்.

    ஆமாம்

    ஆமாம்

    சிலர் சுஷ்மாவை திட்டியும் உள்ளனர். அந்த பதிவுகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்த சுஷ்மா ஸ்வராஜ் இதுபோன்ற டுவீட்டுகளை ஆதரிக்கிறீர்களா என்ற கேள்விக்கு 57 சதவீத பேர் இல்லை என்றும் 47 சதவீதம் பேர் ஆமாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

    அடிக்க வேண்டியதுதானே

    அடிக்க வேண்டியதுதானே

    டெல்லி ஐஐடியில் படித்த முகேஷ் குப்தா என்பவர் தனது டிரோலில் சுஷ்மாவை அடிக்குமாறும், சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் செயலில் இறங்க வேண்டாம் என்று அறிவுறுத்துமாறும் சுஷ்மா கணவர் கௌசலிடம் கேட்டுக் கொண்டார்.

    தாளமுடியாத வலி

    தாளமுடியாத வலி

    இதை பார்த்த கணவர் கௌஷால் அவரை நாங்கள் பெருமிதமாக கருதுகிறோம். அவரை பார்த்து அதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். சட்டம் மற்றும் அரசியலில் நாங்கள் முதல் தலைமுறையினர். அவரது ஆயுளை தவிர நாங்கள் வேறு எதையும் பிரார்த்திக்கவில்லை.இதுபோன்ற வார்த்தைகளால் தாளமுடியாத வலியில் உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Sushma Swaraj, husband continue to face abuse online as BJP keeps itself away. But her husband and former Governor Swaraj Kaushal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X