2 இட்லி 40 ரூபாயா? ஒரு காபி ரூ.18! வேட்பாளர்களின் பிரியாணியிலும் கை வைத்த ஆணையம்? அந்த லிஸ்ட் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது.. அத்துடன் இந்திய தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு வளையமும் நாளுக்கு நாள் இறுக்கமடைந்து வருகிறது.. அதிலும், வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவினங்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட 40 லட்சம் ரூபாய் வரம்பிற்குள் இருப்பதை உறுதி செய்ய, டீ முதல் குதிரைப்படை வரை ஒவ்வொன்றுக்கும் ஒரு விரிவான விலைப் பட்டியலை ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.. இதுதான் தற்போது சோஷியல் மீடியாவில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது..

தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலில் 2 இட்லிக்கு 40 ரூபாய், அசைவ உணவுக்கு 350 ரூபாய், பிரியாணி 110, ஒரு கப் காபிக்கு 18 ரூபாய் என சந்தை விலைக்கு இணையான அல்லது சில இடங்களில் அதற்கும் மேலான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.. இதனால், "இது உண்மையிலேயே கட்டுப்பாடா? இல்ல செலவை artificial-ஆ உயர்த்துறதா?" என்ற கேள்வியும் எழ ஆரம்பித்துவிட்டது..

EC Food Price

2 இட்லிக்கு 40 ரூபாய்

இது தவிர, பிரச்சார மேடைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் இருக்கைகள், மேஜைகள், குஷன் சோபாக்கள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளான கரகாட்டம், மயிலாட்டம் போன்றவற்றுக்கும் தனித்தனியே கட்டணங்கள் வகுக்கப்பட்டுள்ளன.. தேர்தல் களத்தில் பண பலத்தைக் குறைப்பதற்கான ஒரு முயற்சியாக இது பார்க்கப்பட்டாலும், அரசியல் வட்டாரங்களில் இது பெரும் விவாதத்தையும் பதற்றத்தையும் உருவாக்கி வருகிறது..

இந்த விலை பட்டியல் சில சாதகமான அம்சங்களையும் வெளிப்படுத்துகிறது.. குறிப்பாக பெரும் கோடீஸ்வர வேட்பாளர்கள் தாராளமாக செலவு செய்து வாக்காளர்களை கவரும் போக்கை கட்டுப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.. இதனால் எளிய பின்னணி கொண்ட வேட்பாளர்களும் களத்தில் நின்று போட்டியிட ஒரு அளவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதும் கூறப்படுகிறது..

சுவிதா ஆப் - கிடுக்கிப்பிடி

அதேபோல் ஒவ்வொரு செலவும் "சுவிதா" செயலி மூலம் கண்காணிக்கப்படுவதால், அதிகாரப்பூர்வமற்ற செலவுகளை குறைப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.. தேர்தல் ஆணையத்தின் இந்த கிடுக்கிப்பிடி நடவடிக்கை, வேட்பாளர்களை தங்களின் செலவுகளை மிகத் துல்லியமாக பராமரிக்கத் தள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது..

இருந்தாலும், இதிலுள்ள நடைமுறை சிக்கல்கள் வேட்பாளர்களை கவலையடைய செய்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.. ஆணையம் நிர்ணயித்துள்ள விலைகள் பல நேரங்களில் சந்தை விலையை விட அதிகமாக இருப்பதாக இப்போதே புகார்கள் எழ ஆரம்பித்துள்ளன..

தேர்தல் ஆணையம் - விலைப்பட்டியல்

உதாரணமாக, மொத்தமாக உணவு ஆர்டர் செய்யும்போது கிடைக்கும் சலுகைகளை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளாமல், ஒரு நிரந்தர விலையை மட்டும் அடிப்படையாகக் கொள்வது வேட்பாளர்களின் மொத்த செலவு வரம்பை மிக விரைவாக எட்டச் செய்யும் அபாயம் உள்ளது..

இதனால் உண்மையில் குறைவாக செலவு செய்யும் வேட்பாளர் கூட, ஆணையத்தின் கணக்குப்படி அதிக செலவு செய்தவராக காட்டப்படும் நிலை உருவாகலாம்.. இது தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய சட்டச் சிக்கல்களுக்கும் வழிவகுக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது..

வேட்பாளர்கள் அதிருப்தி

எப்படியோ, இந்த விலை பட்டியல் வெளியீடு தமிழக அரசியலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதில் ஐயமில்லை.. ஏற்கனவே பல இடங்களில் அரசியல் கட்சி நிர்வாகிகள் இந்த விலைப் பட்டியலை நடைமுறைக்கு பொருந்தாதது என்று விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்..

இதன் விளைவாக, வேட்பாளர்கள் தங்கள் பிரச்சார கூட்டங்களை மிக சுருக்கமாகவோ அல்லது குறைந்த அளவிலான ஆட்களை கொண்டோ நடத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படலாம் என்ற கணிப்பும் உள்ளது..

அதுமட்டுமல்ல, தேர்தல் ஆணையத்தின் இந்த கெடுபிடிகளையும் மீறி, கணக்கில் வராத செலவுகளை எப்படி மேற்கொள்வது என்ற மாற்று வழிகளை தேடும் போக்கும் அதிகரிக்கக்கூடும் என்ற கருத்தும் வலுப்பெறுகிறது..

மொத்தத்தில், இந்த விலை பட்டியல் தேர்தலை உண்மையிலேயே தூய்மைப்படுத்துமா? அல்லது கணக்குகளை மறைப்பதற்கான புதிய யுக்திகளுக்கு கதவு திறக்குமா? என்பது தான் இப்போது பெரிய கேள்வியாக மாறியுள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

என்னாது பிரியாணி இல்லையா

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தேர்தல் செலவினங்களுக்கான உத்தேச விலைப் பட்டியலில், தமிழக அரசியலில் பிரிக்க முடியாத அங்கமாக விளங்கும் பிரியாணி இடம்பெறாதது பெரும் விவாதத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகத் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் உணவு வழங்கும்போது பிரியாணி முதன்மை இடத்தைப் பிடிக்கும் நிலையில், ஆணையம் நிர்ணயித்துள்ள உணவுகளுக்கான பட்டியலில் சைவம் மற்றும் அசைவ சாப்பாடுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, அசைவச் சாப்பாட்டின் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், பிரியாணி என்று தனிப்பட்ட முறையில் குறிப்பிடப்படாதது, வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கீட்டில் சிக்கல்களை உருவாக்கலாம் எனக் கருதப்படுகிறது. கள நிலவரப்படி அதிக செலவு பிடிக்கும் பிரியாணியை விடுத்து, சாதாரண உணவுகளின் விலையை மட்டும் ஆணையம் கணக்கில் எடுத்துக்கொண்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+