பெங்களூரை உலுக்கிய சாப்ட்வேர் என்ஜீனியர் கொலை.. துப்பாக்கியால் சுட்டு குற்றவாளி கைது!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பெங்களூரை உலுக்கிய சாப்ட்வேர் என்ஜீனியர் கொலை காரணம்-வீடியோ

பெங்களூரு : அசெஞ்சர் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்த பிரனாய் மிஸ்ரா அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்துள்ளனர்.

அசெஞ்சர் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தவர் 28 வயது இளைஞர் பிரனாய் மிஸ்ரா. ஞாயிற்றுக் கிழமை இரவு பார்ட்டிக்கு சென்று விட்டு தனது கைக்கில் தாவரகெரே ரோட்டிலுள்ள சாக்லேட் பேக்டரி பகுதிக்கு அவர் சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த சில மர்ம நபர்கள் பிரனாயியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் அந்த இடத்திலேயே சரிந்து விழுந்த பிரனாயியை மர்ம நபர்கள் கத்தியால் குத்திவிட்டும் தப்பியுள்ளனர். இதனைடத்து ரத்த வெள்ளத்தில் மிதந்த பிரனாயியை பாதசாரிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 கார்த்திக்கிற்கு தொடர்பு இருக்கலாம்

கார்த்திக்கிற்கு தொடர்பு இருக்கலாம்

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்திற்கும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கார்த்திக் என்பவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர்.

 துப்பாக்கி முனையில் பிடித்த போலீஸ்

துப்பாக்கி முனையில் பிடித்த போலீஸ்

இதனையடுத்து நேற்று பரப்பன அக்ரஹாரா சிறைப் பகுதிக்கு அருகே கார்த்திக்கை பிடிக்க போலீசார் முயன்றுள்ளனர். அப்போது குற்றவாளி கார்த்திக் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியதோடு, கத்தியை வைத்து போலீசாரைத் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் 2 போலீசார் காயமடைந்த நிலையில் குற்றவாளியை பிடிக்க போலீசார் 3 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

 குற்றவாளிக்கு சிகிச்சை

குற்றவாளிக்கு சிகிச்சை

இதில் ஒரு குண்டு கார்த்திக்கின் தோள்பட்டையில் பட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து கார்த்திக்கை பிடித்த போலீசார் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 பைக்கை உரசியதால் ஆத்திரம்

பைக்கை உரசியதால் ஆத்திரம்

பிரனாயி மிஸ்ரா மீதான கொலைவெறித் தாக்குதல் குறித்த முதற்கட்ட விசாரணையில் பிரனாயி பெங்களூரு புறநகர்ப் பகுதியில் வந்து கொண்டிருந்த போது கார்த்திக்கின் பைக்கில் மோதியதாகத் தெரிகிறது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் நண்பரின் பைக்கில் தொடர்ந்து வந்த கார்த்திக் பிரனாயியை தாக்கியதோடு கத்தியால் குத்தியதும் தெரிய வந்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bangalore police arrested the suspect of Pranoy Mishra stabed death on monday morning, police arrested the accuste by opening fire thrice.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற