For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குருகிராமில் வானத்தை மறைத்தபடி படர்ந்து காணப்படும் வெட்டுக்கிளிகள்.. இத்தனை நாளாய் எங்கிருந்தீர்?

Google Oneindia Tamil News

குர்கான்: ஹரியானா மாநிலம் குர்கானில் வெட்டுக்கிளி கூட்டங்கள் வானத்தையே மறைத்தபடி பறந்து செல்வதைப் பார்த்ததாக மக்கள் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.

கொரோனா கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதில் சுமார் 2 மாதங்களுக்கு மக்கள் வீட்டை விட்டு வெளியே வராததால் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வந்தார்கள்.

இந்த நிலையில் வடமாநிலங்களில் கூட்டம் கூட்டமாக வந்த வெட்டுக்கிளிகள் பயிர்களை சேதப்படுத்தியது. இவை அண்மையில் ஏற்பட்ட ஆம்பன் புயலால் ஏற்பட்ட காற்றின் திசை மற்றும் ஈரப்பதம் காரணமாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு படையெடுத்தது.

ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை.. மத்திய அரசின் இ சஞ்சீவினி திட்டம்ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை.. மத்திய அரசின் இ சஞ்சீவினி திட்டம்

வாழ்வாதாரம்

வாழ்வாதாரம்

இதனால் விவசாயப் பயிர்களை நாசம் செய்தது. சீசனுக்கேற்ப உணவுத் தேடி வரும் வெட்டுக்கிளிகளில் ஒன்று, 32 ஆயிரம் பேரின் உணவை அழித்து திண்ணும் ஆற்றல் கொண்டது. இந்த வெட்டுக்கிளிகள் சாரை சாரையாக பறந்து வந்து பயிர்களை நாசம் செய்ததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உணவு பற்றாக்குறை ஏற்படும் சூழல் இருந்தது.

பிரச்சினை

பிரச்சினை

இத்தனை நாட்களாக வெட்டுக்கிளிகள் பிரச்சினை சற்று ஓய்ந்திருந்தது. தற்போது குருகிராம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் இந்த வெட்டுக்கிளிகளை தங்கள் போனில் வீடியோ எடுத்துள்ளார்கள். சைபர் ஹப் பகுதிக்கு அருகே ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் வானத்தை மறைத்தவாறு பறந்து செல்வதை காண முடிந்ததாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

வெட்டுக்கிளிகள்

வெட்டுக்கிளிகள்

இதன் காரணமாக அருகில் உள்ள மற்ற பகுதிகளில் குடியிருப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் வீடுகளின் ஜன்னல்களை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. வெட்டுக்கிளிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் பாத்திரங்களை கொண்டு சப்தம் எழுப்புகிறார்கள்.

Recommended Video

    வெட்டுக்கிளியை விரட்ட வில்லேஜ் விஞ்ஞானிகளின் சூப்பர் கண்டுபிடிப்பு - வீடியோ
    பூச்சிகளை விரட்ட

    பூச்சிகளை விரட்ட

    இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், வெட்டுக்கிளிகளின் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது. நாங்கள் உடனடியாக ஜன்னல்களையும் கதவுகளையும் மூடினோம். பூச்சிகளை விரட்ட சைரன்களை நிறுவும் பணிகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது என்றார் அவர்.

    English summary
    Swarms of Locust attack seen in Gurgaon, locals share videos.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X