For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

700 பன்றிகள்.. 17 கிராமங்கள்.. மரண பீதியை கிளப்பும் ஆப்ரிக்க காய்ச்சல்.. என்ன நடக்கிறது திரிபுராவில்?

மிசோரத்தில் பரவி வந்த, பன்றிக்காய்ச்சல் பாதிப்பானது, திரிபுராவிலும் பரவி வருகிறது

Google Oneindia Tamil News

டிஸ்பூர்: மிசோரத்தில் பரவி வந்த, பன்றிக்காய்ச்சல் பாதிப்பானது, திரிபுராவையும் பீடித்துவிட்டது.. இதையடுத்து, அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் பரவ தொடங்கிவிட்டது.. அந்த வகையில், பன்றி காய்ச்சலும் ஒன்று..

மழைக்காலங்களில் பொதுவாக சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பிரச்சனை வருவது இயல்பு. இதைத்தான் ஃப்ளூ என்பார்கள்..

சிந்தியாவிற்கு பன்றிக்காய்ச்சல்.. போன் சுவிட்ச் ஆப்.. ஆல் இஸ் வெல்.. திக்விஜய் சிங் ஷாக் விளக்கம்! சிந்தியாவிற்கு பன்றிக்காய்ச்சல்.. போன் சுவிட்ச் ஆப்.. ஆல் இஸ் வெல்.. திக்விஜய் சிங் ஷாக் விளக்கம்!

 அறிகுறிகள்

அறிகுறிகள்

அடினோ வைரஸ், ரைனோவைரஸ் போன்றவற்றால் வருகிறது... இன்ப்ஃளூயன்ஸா என்னும் வைரஸால் உருவாவது தான் ஸ்வைன் ஃப்ளூ என்று அழைக்கப்படும் பன்றிகாய்ச்சலாகும்.. இந்த காய்ச்சல் சீசனுக்கு ஏற்றார் போல பரவி வருவதாகும்.. இதற்கான அறிகுறிகள் எங்கு தெரிந்தாலும், அந்தந்த அரசுகள், உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவிடும்.

பன்றிகள்

பன்றிகள்

அந்த வகையில், மிசோரத்தில் இந்த பன்றிக்காய்ச்சல் மிரட்டி வந்தநிலையில், தற்போது, திரிபுராவிலும் ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது.. இதுவரை இந்த பன்றிக்காய்ச்சலால் 60க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்ததாக விலங்கு வள மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது... இதுகுறித்து ஒரு ஆய்வையும் மேற்கொண்டு, அறிக்கை ஒன்றையும் கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்டுள்ளது.

 சோதனைக்கூடம்

சோதனைக்கூடம்

அதில், "பன்றிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஏப்ரல் 7-ம் தேதி வடகிழக்கு பகுதி நோய் கண்டறிதல் சோதனைக்கூடத்திற்கு அனுப்பப்பட்டது. ஏப்ரல் 13 என்று கிடைத்த பரிசோதனை முடிவில் அனைத்து மாதிரிகளிலும் பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று நோய் பண்ணையில் உள்ள அனைத்து பன்றிகளுக்கு இடையே பரவி வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்றிகள்

பன்றிகள்

இதன் பாதிப்பு அடுத்தடுத்து வேகமாக பரவி வருவதால், அங்குள்ள அனைத்து பன்றிகளையும் கொல்வதற்கு திரிபுரா அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.. இதையடுத்து, உடனடியாக 8 அடிக்கு 8 அடி குழிகள் வெட்டி அனைத்து பாதிக்கப்பட்ட பன்றிகளையும் புதைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது... இதற்கான அனைத்து பண்ணைகளையும் சோதனையிட்டு நடவடிக்கை எடுப்பதற்கு 10 பேர் கொண்ட 2 டீம்களும் நியமிக்கப்பட்டுள்ளன..

 சோதனைக்கூட அதிகாரிகள்

சோதனைக்கூட அதிகாரிகள்

இந்த குழுவானது, விலங்கியல் மருத்துவர்களால் வழிநடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திரிபுராவில் நிலவும் இந்த ஆபத்தான சூழல் குறித்த, சோதனைக்கூட அதிகாரிகள், இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்கள்.. அதில், மிசோரத்தில் மட்டும் 700 பன்றிகள் ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நோய் 17 கிராமங்களுக்கும் பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளில் திரிபுரா அரசு களமிறங்கி உள்ளது.

English summary
Swine flu: african swine fever tripura mass execution of pigs ordered
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X