For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயிரை கையில் பிடித்து கொண்டு.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் தொழிலாளர்கள்.. பெரும் காஷ்மீர் சோகம்

தீவிரவாதிகளின் தாக்குதல் காஷ்மீரில் அதிகரித்து வருகிறது

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: காஷ்மீரில், தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது..

காஷ்மீரில் கடந்த சில காலமாகவே அப்பாவி பொதுமக்கள் மீதான தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.. 10 நாளைக்கு முன்பு, ஸ்ரீநகரில் உள்ள இக்பால் பூங்கா பகுதியில் மக்கன் லால் பிந்த்ரூ என்பவரை மர்மநபர்கள் சுட்டுக் கொன்றனர்.

ரேஸில் 6 பேர்.. அவரையும் விட்டு வைக்காத சிஎஸ்கே மேலிடம்.. தோனிக்கு பின் கேப்டனாக போவது யார்? ரேஸில் 6 பேர்.. அவரையும் விட்டு வைக்காத சிஎஸ்கே மேலிடம்.. தோனிக்கு பின் கேப்டனாக போவது யார்?

1990களில் தீவிரவாதம் உச்சத்தில் இருந்தபோது, தன்னுடைய மருந்து கடையை மூடாமல் பொது மக்களுக்காக சேவை செய்தவர்தான் இந்த பிந்த்ரூ என்பவர்... அந்த ஆத்திரத்தில், இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

 துப்பாக்கிசூடு

துப்பாக்கிசூடு

அதேபோல, ஸ்ரீநகர் லால் பஜார் பகுதியில், வீரேந்திர பஸ்வான் என்ற தெருவோர பானிபூரி கடைக்காரர் ஒருவரையும் தீவிரவாதியால் சுட்டுக் கொன்றனர்.. இதற்கடுத்ததாக, பந்திப்பூராவில் முகமது ஷாஃபி என்ற கார் டிரைவர் கொடூரமாக கொல்லப்பட்டார்.. இப்படி ஒரேநாளில் ஒரு மணி நேரத்தில் 3 பேரை அடுத்தடுத்து சுட்டு கொன்றனர் தீவிரவாதிகள்... இந்த சம்பவம் நடந்து அடுத்த நாளில், ஸ்ரீநகர் அருகே இட்கா சங்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 2 ஆசிரியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

என்ன ஏதென்றுகூட விசாரிக்காமல், யாருமே எதிர்பார்க்காதவகையில், 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்... இப்படி ஒருசில தினங்களிலேயே 9 பேர் உயிரிழந்த சம்பவம் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பெருத்த அதிர்ச்சியை உண்டுபண்ணியது.. மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை நடத்திய பாதுகாப்புப் படையினர், பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு உடையதாக கூறி, 700-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்...

 குல்காம் மாவட்டம்

குல்காம் மாவட்டம்

இதைதவிர அப்பாவி பொது மக்களை சுட்டுக் கொன்ற, 10-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளையும், பாதுகாப்புப் படையினர் தேடி கண்டுபிடித்து துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இப்படிப்பட்ட சூழலில்தான், ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள வன்போ என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.. இதில், பீகார் மாநிலத்தை சேர்ந்த 2 புலம்பெயர் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியாகினர்... மேலும் ஒரு தொழிலாளி படுகாயம் அடைந்தார்...

Recommended Video

    எல்லையில் அத்துமீறினால் மீண்டும் Surgical strike. Pakistan-க்கு Amit Shah எச்சரிக்கை|Oneindia tamil
     11 பேர்

    11 பேர்

    அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறித்த பாதுகாப்புப் படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்... தாக்குதல் நடந்த இடத்தில் ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.. ஜம்மு - காஷ்மீரில், இந்த மாதத்தில் மட்டும், இதுவரை அப்பாவி பொது மக்கள் 11 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர்.

     குறி வைப்பு?

    குறி வைப்பு?

    இதுவரை கொல்லப்பட்ட 11 பேரில் 5 பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதால், வெளிமாநிலத்தவரை காஷ்மீரில் இருந்து விரட்டும் திட்டத்துடன் தீவிரவாதிகள் செயல்படுவதாக கூறப்படுகிறது.. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில தினங்களாக வெளி மாநில தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது..

    சிவசேனா

    சிவசேனா

    சிவசேனா மூத்த தலைவர் சஞ்செய் ராவத், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சொல்லும்போது, "ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழல் கவலை அளிக்கிறது... பீகாரை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள், காஷ்மீரி பண்டிட்கள், சீக்கியர்கள் குறிவைக்கப்படுகின்றனர். பாகிஸ்தானை சொன்னால், நீங்கள் சர்ஜிக்கல் தாக்குதல் பற்றி பேசுகிறீர்கள்.. ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து உள்துறை அமைச்சரும், பாதுகாப்புத்துறை அமைச்சரும் விளக்கம் தர வேண்டும்... ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370- நீக்கிய பிறகும் அங்கு சூழல் மேம்படவில்லை. பயங்கரவாதம்தான் அதிகரித்துள்ளது" என்றார்.

     அபாயம்

    அபாயம்

    இப்போது நிலைமை என்னவென்றால், தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. ஜம்மு - காஷ்மீரில் தங்கியிருக்கும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தீவிரவாத தாக்குதலுக்கு பயந்துகொண்டு, சொந்த ஊர்களுக்கு குடும்பங்களுடன் திரும்பி வருகின்றனர்... இதைபற்றி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் சொல்லும்போது, இங்கு நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.. பிழைப்பு தேடி குழந்தைகளுடன் வந்து இங்கு தங்கியிருந்தோம்... இப்போது எங்கள் சொந்த ஊர்களுக்கே திரும்புகிறோம் என்கிறார்.

    English summary
    Terrorist attack: Migrant workers fear life start leaving from Kashmir
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X